அஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ

news18
Updated: September 17, 2019, 3:13 PM IST
அஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ
அஸ்வின்
news18
Updated: September 17, 2019, 3:13 PM IST
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு வீடியோ வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது 33-வது வயதில் அடியெடுத்து வைத்தார். அவருக்கு விளையாட்டுத்துறையை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான தன்னுடைய முதல் டெஸ்ட் தொடரிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளையும் எடுத்தார் அஸ்வின். அந்த தொடரில் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. முதல் தொடரிலேயே ஆட்ட நாயகன் விருது வென்ற 3-வது இந்தியர் என்ற சாதனை படைத்தார்.


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 300 விக்கெட்டுகளை எடுத்த வீரர் அஸ்வின். 65 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 342 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 4 சதங்களை அடித்துள்ளார்.

பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அஸ்வினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 100, 200, 300-வது விக்கெட்டுகளை எடுத்ததை பதிவு செய்துள்ளது பிசிசிஐ.Also watch

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...