ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளில் ஆதாயம் பெறுவது தொடர்பாக வந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு பிசிசிஐ சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார். அண்மையில் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) விதிமுறைப்படி, அந்த அமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளில் ஒருவர் இரு பதவிகளை வகிக்க முடியாது. இது விதிமீறல் என்பதால், சம்மந்தப்பட்ட நபர், இரண்டில் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி சார்பில் ரிக்கி பாண்டிங் மற்றும் சவுரவ் கங்குலி. (DD)
இந்நிலையில், கங்குலி, ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளின் மூலம் ஆதாயம் பெறுவதாக பிசிசிஐ இடம் புகார் வந்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கொல்கத்தா அணி சொந்த மைதானத்தில் விளையாடும்போது, அம்மாநில சங்கத் தலைவரான கங்குலி, எப்படி டெல்லி அணிக்கு ஆதரவாக செயல்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, உச்சநீதிமன்றத்தால் பிசிசிஐ-யின் நன்னடத்தை அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் இந்தப் புகார்களை விசாரிக்கத் தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக, இரட்டை ஆதாயம் பெறும் நோக்கில் செயல்படுவதாக வந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Also Watch...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.