ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிசிசிஐ உயர்மட்ட கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது… இந்திய அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முக்கிய ஆலோசனை…

பிசிசிஐ உயர்மட்ட கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது… இந்திய அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முக்கிய ஆலோசனை…

பிசிசிஐ

பிசிசிஐ

20 ஓவர் போட்டிக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம் என்று பிசிசிஐ நிர்வாகிகள் கருதுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர்மட்ட கூட்டம் புதன் கிழமை நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் மாற்றம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்காக தனித்தனி கேப்டன்களை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக பேசலாம் என்று கூறப்படுகிறது. வீடியோ கான்பரன்ஸ் முறையில் இந்த கூட்டத்தை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில், அரையிறுதி ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை இந்தியா அடைந்தது. இது ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்திய அணியின் டி20 கேப்டனை மாற்றுவது குறித்து முக்கியமாக பேசப்படலாம்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..! விழாக்கோலத்தில் அர்ஜெண்டினா..

தற்போது அணியின் கேப்டனாக 35 வயதாகும் ரோகித் சர்மா இருந்துவருகிறார். அவரால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பின்னர் விளையாட முடியாது என்பதால் அந்த இடத்தில் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவை நியமிக்கலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தின்போது ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதேபோன்று இந்திய வீரர்களின் ஊதிய பட்டியலும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதுபற்றியும் பிசிசிஐ உயர்மட்ட கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. ராகுல் டிராவிட்டை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பயிற்சியாளராக தொடர செய்வது என்றும் 20 ஓவர் போட்டிக்கு தனி பயிற்சியாளரை நியமிக்கலாம் என்றும் பிசிசிஐ நிர்வாகிகள் கருதுகின்றனர். இந்த விவகாரம் குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம்.

இதேபோன்று பீல்டிங் பயிற்சியாளர், ஃபிசியோ உள்ளிட்ட பணியாளர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று பிசிசிஐ கருதுகிறது. அந்த வகையில் இவர்களும் மாற்றி அமைக்கப்படலாம். இந்திய வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிசிசிஐ கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை கண்டு ரசித்த இந்திய கிரிக்கெட் அணி… ஃபோட்டோஸ் வைரல்…

இந்திய அணி அடுத்ததாக இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் பற்றி முக்கியமாக கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. தீபக் சஹர், ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களின் நிலை குறித்தும் நாளை மறுதினம் நடைபெறவுள்ள பிசிசிஐ உயர்மட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

First published:

Tags: BCCI