ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சமம் என்றாலும் சமம் இல்லை... இந்திய கிரிக்கெட்டில் ஆடவர், மகளிர் இடையே நிலவும் ஊதிய பேதம்

சமம் என்றாலும் சமம் இல்லை... இந்திய கிரிக்கெட்டில் ஆடவர், மகளிர் இடையே நிலவும் ஊதிய பேதம்

மாதிரி படம்

மாதிரி படம்

ஆடவர் அணிக்கும் மகளிர் அணிக்கு ஆண்டு ஊதியங்கள் வேறுபாடுகள் பெரிய அளவில் உள்ள நிலையில் எப்படி சமமான ஊதியம் வழங்கப்படுகிறது என பலரும் கேள்வி

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு வழங்கும் சம்பளம் மகளிர் அணிக்கும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் இந்திய அணியில் யாருக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை பார்போம்...

  உலகின் மிக பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ திகழ்ந்து வருகிறது. ஐசிசி-யில் என்ன தான் புது புது விதிமுறைகள் கொண்டு வந்தாலும் அது பிசிசிஐயின் முடிவாகவே அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பார்க்கிறது. ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களை நடத்தி உலகில் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் பிசிசிஐயின் சொத்து மதிப்பு ரூ.15ஆயிரம் கோடிக்கு மேல் என கணக்கீடப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் இந்திய மகளிர் அணிக்கும் ஆண்கள் அணியை போலவே சம ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெ ஷா அறிவித்துள்ளதற்கு பல்வேறு தரப்பினர்  வரவேற்று வரும் நிலையில் என்ன தான் அவர்களுக்கு சம ஊதியம் வழங்கினாலும் ஆடவர் அணியில் இருக்கும் வீரர்களுக்கே ஊதியம் அதிகம் கிடைக்கிறது.

  மகளிர் அணிக்கு வழங்கப்பட்டுள்ள புதிய ஊதியம் என்ன?

  டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு ஆட்டத்துக்கு ஏற்கனவே மகளிர் அணியில் ஒரு வீராங்கனைக்கான சம்பளம் ரூ.4 லட்சத்தில் இருந்து தற்போது ஆடவர் அணிக்கு தரப்படும் ஊதியமான ரூ.15 லட்சத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு ஆட்டத்துக்கு ஏற்கனவே மகளிர் அணியில் ஒரு வீராங்கனைக்கான சம்பளம் ஒரு லட்ச ரூபாய், அது தற்போது ஆண்களுக்கு தரப்படும் ஊதியமான 6 லட்ச ரூபாய் என்ற அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் டி20 போட்டிகளுக்கு ஒரு ஆட்டத்துக்கு ஏற்கனவே மகளிர் அணியில் ஒரு வீராங்கனைக்கான சம்பளம் ஒருலட்ச ரூபாய், அது தற்போது ஆண்களுக்கு தரப்படும் ஊதியமான 4 லட்ச ரூபாய் என்ற அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

  பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம் எப்படி?

  ஆண்கள் அணியில் க்ரேட் A+,A,B,C என நான்கு பிரிவுகள் உள்ளன.

  A+ க்ரேடில் இருக்கும் வீரர்களுக்கு அவர்கள் போட்டி விளையாடினாலும் விளையாடவிட்டாலும் ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட மூன்று வீரர்கள் மட்டுமே உள்ளனர்.

  A+ க்ரேட் வீரர்கள்

  A க்ரேட் வீரர்கள்:

  A க்ரேடில் இருக்கும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி ஊதியமாக பிசிசிஐ வழங்குகிறது. இந்த பிரிவில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, புஜாரா, ரகானே, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், முகமது ஷமி, இஷாந்த் சர்மா,ரிஷப் பந்த் மற்றும் ஹார்திக் பாண்டிய உள்ளிட்டோர் உள்ளனர்.

  B க்ரேட் வீரர்கள்:

  B க்ரேடில் இருக்கும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியமாக பிசிசிஐ வழங்குகிறது. இந்த க்ரெடில் புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாகூர், மயாக் அகர்வால் உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

  C க்ரேட் வீரர்கள்:

  C க்ரேடில் இருக்கும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் முகமது சிராஜ், ஸ்வேந்தர சாஹால், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் பட்டேல், ஹானும விகாரி, சுப்மன் கில்,தீபக் சாஹர், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

  இதையும் படிங்க: மழையால் தொடர்ந்து பாதிக்கும் டி20 உலககோப்பை போட்டிகள் : என்ன செய்ய போகிறது ஐசிசி?

  க்ரேட்டில் ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு இடையே உள்ள ஊதிய வேறுபாடு என்ன?

  ஆடவர் அணிக்கு இருப்பது போல் மகளிர் அணியில் A+ என்ற க்ரேட் இல்லை A,B,C என மூன்று க்ரேடுகள் மட்டுமே உள்ளது. இதில் A அணியில் இருக்கும் வீரங்கனைகளுக்கு வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த க்ரெடில் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, புனம் யாதவ், தீப்தி சர்மா, ராஜேஸ்வரி காயவாட், ஷபாலி வர்மா உள்ளிட்ட வீரங்கனைகள் மட்டுமே உள்ளனர்.

  B க்ரேட் வீரங்கனைகள்:

  B க்ரேட் வீரங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியமாக பிசிசிஐ வழங்குகிறது. இதில் மிதாலி ராஜ், கோஸ்வாமி, தனியா பாட்யா, பூஜா வஸ்டாரகர் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

  C க்ரேட் வீரங்கனைகள்:

  C க்ரேட் வீரங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் பூனம் ராட், ஷிக்கா பாண்டே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அருந்ததி ரெட்டி,ஹர்லின் டியோல், ரிட்ஷா கோஷ், சினே ரானா உள்ளிட்ட வீரங்களைகள் இடம் பிடித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் உள்ளூர் போட்டிகள் விளையாடும் வீரர்களுக்கு பிசிசிஐ ஊதியம் வழங்கி வருகிறது. 40 உள்ளூர் போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.60 ஆயிரம் , 23வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்க் ரூ.25 ஆயிரம், 19வயதுக்கு குறைவான உள்ளூர் வீரர்களூக்கு ரூ.20 ஆயிரம் ரூபாய் ஊதியமாக ஒரு ஆட்டத்திற்கு பிசிசிஐ வழங்கி வருகிறது.

  இதையும் படிங்க: 1 இன்னிங்ஸ்... 12 அரைசதம்.. உலக சாதனை வாசலில் விராட் கோலி!

  ஆடவர் மற்றும் மகளிர் அணி ஆண்டுதோறும் விளையாடும் போட்டிகளின் விவரம்:

  தொடர்கள் ஆடவர்      மகளிர்
  டெஸ்ட்      குறைந்தது 7 போட்டிகள் -
  ஒருநாள் போட்டி24 போட்டிகள்18 போட்டிகள்
  டி20 போட்டிகள்  42  போட்டிகள் 24 போட்டிகள்

                                                                                                        

  இப்படி இந்திய ஆடவர் அணியை விட மகளிர் அணி ஆண்டுதோறும் குறைந்த சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. எப்படி பார்த்தாலும் ஆடவர் அணிக்கு இணையான ஊதியம் மகளிர் அணிக்கு வழங்கப்படுவதில்லை என்பதே உண்மை. உதாரணமாக ஆடவர் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை எடுத்துக்கொள்வோம்.

  ஆடவர் அணியில் கேப்டன் ரோகித் சர்மா 7 டெஸ்ட், 24 ஒரு நாள், 42 டி20 போட்டிகளில் ஒரு வருடம் விளையாடினால் அவருக்கு பிசிசிஐ,  போட்டிக்கான சம்பளமாக கொடுக்கும் தொகை - ரூ.3.75 கோடி + ஆண்டு ஒப்பந்தம் ரூ.7 கோடி ரூபாய் மொத்தமாக ரூ.10.75 கோடி அவருக்கு கிடைக்கும்.

  இதே மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 18 ஒரு நாள், 24 டி20 போட்டிகளில் ஒரு வருடம் ஆடினால் அவருக்கு ரூ.1.8 கோடி + ஆண்டு ஒப்பந்தம் ரூ.50 லட்ச ரூபாய் மொத்தமாக ரூ.2.3 கோடி ஊதியமாக பிசிசிஐ வழங்குகிறது. இப்படி ரோகித் சர்மாவுக்கும் கவுருக்குமான இருக்கும் ஊதிய வித்தியாசமே ரூ.8.45 கோடி ஆகும் .இப்படி இருக்க எப்படி இருவருக்கும் இணையான ஊதியம் பிசிசிஐ வழங்குகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: BCCI, Indian cricket team, Indian women cricket