பிப்ரவரியில் இந்தியா வருகிறது ஆஸ்திரேலிய அணி... போட்டி அட்டவணை வெளியீடு!

#Australiatour of India will start from 24th February | பிப்ரவரி மாத இறுதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது. #INDvAUS

Web Desk | news18
Updated: January 10, 2019, 5:19 PM IST
பிப்ரவரியில் இந்தியா வருகிறது ஆஸ்திரேலிய அணி... போட்டி அட்டவணை வெளியீடு!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி-20 போட்டி. (BCCI)
Web Desk | news18
Updated: January 10, 2019, 5:19 PM IST
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் பிப்ரவரி மாதம் விளையாட இருக்கும் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜன.12) தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு, ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்து செல்கிறது இந்திய அணி.

Indian Team, இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி. (File)


பின்னர், வரும் பிப்ரவரி மாத இறுதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது. இங்கு, இரண்டு டி-20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது.
Loading...
Match Schedule, போட்டி அட்டவணை, Ind Vs Aus
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வரும் போட்டி அட்டவணை. (BCCI)


இந்திய நேரப்படி, டி-20 போட்டிகள் இரவு 7 மணிக்கும், ஒருநாள் போட்டிகள் பிற்பகல் 1.30 மணிக்கும் தொடங்குவதாக கூறப்பட்டுள்ளது.

தோனி எங்களுக்கு வழிகாட்டும் ஒளி...! ரோகித் சர்மா நெகிழ்ச்சி.

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...