வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு!

#BCCI Announces Cash Awards | ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை 2-1 என வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. #AUSvIND

Web Desk | news18
Updated: January 8, 2019, 7:08 PM IST
வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு!
பார்டர் - கவாஸ்கர் கோப்பை உடன் இந்திய வீரர்கள். (ICC )
Web Desk | news18
Updated: January 8, 2019, 7:08 PM IST
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணிக்கு பல லட்சங்களில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

Virat Kolhi, விராட் கோலி, Tim Paine
கைகுழுக்கும் இரு அணி கேப்டன்கள் விராட் கோலி (இடது) மற்றும் டிம் பெய்ன். (Cricket Australia)


அடுத்து நடந்த, 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


ஆஸ்திரேலியாவில் சாதித்த இந்திய அணிக்கு பல லட்சங்களில் பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. போட்டி ஒன்றிற்கு, ஆடும் லெவனில் இருந்த வீரர்களுக்கு, அதாவது மைதானத்தில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.15 லட்சமும், மாற்று வீரர்களுக்கு ரூ.7.5லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BCCI, பிசிசிஐ
பிசிசிஐ. (Getty Images)
Loading...
அத்துடன், பயிற்சியாளர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர் அல்லாத மற்ற பணியாளர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் விதிகளின்படி பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

ஐ.பி.எல் போட்டி எங்கு நடைபெறும்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Also Watch...

First published: January 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...