2021ம் ஆண்டுக்கான பிசிசிஐ வீரர்களின் ஒப்பந்தப் பட்டியல் அறிவிப்பு: கோலி உட்பட 3 வீரர்களுக்கு ஏ+ பட்டியலில் இடம்!

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்

பிசிசிஐ வெளியிட்டுள்ள 2021ம் ஆண்டுக்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
இந்திய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2021ம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவர் மட்டும் ஏ+ கிரேடு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் சம்பளத் தொகை ஆண்டுக்கு 7 கோடி ரூபாயாகும்.

பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலானது 2020 அக்டோபர் முதல் 2021 செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்கானது. பிசிசிஐ-ன் ஒப்பந்த பட்டியல் என்பது 4 ஊதிய அமைப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஏ+ பிரிவில் இடம்பெறும் வீரர்கள் ரூ.7 கோடியும், ஏ பிரிவில் இடம்பெறும் வீரர்கள் 5 கோடி ரூபாயும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்கள் 3 கோடி ரூபாயும், சி பிரிவில் இடம்பெறும் வீரர்கள் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக பெறுவார்கள்.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஒப்பந்த பட்டியலில் ஏ கிரேடு பிரிவுக்கு முன்னேறியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஒரு நிலை சரிந்து பி கிரேடில் இடம்பெற்றுள்ளார். அதே போல ஷர்துல் தாக்கூர் ஒரு நிலை முன்னேறி பி கிரேடுக்கு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏ கிரேடில் இடம்பெற்றிருந்த குல்தீப் யாதவ்வ், 2 இடங்கள் சரிந்து சி கிரேடுக்கு வந்துள்ளார்.

இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒப்பந்தப் பட்டியலில் இருந்து மனிஷ் பாண்டே மற்றும், கேதர் ஜாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில், அக்ஸர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

2021ம் ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்:கிரேடு ஏ+ (ரு.7 கோடி)

விராட் கோலி,
ரோகித் சர்மா
ஜஸ்பிரித் பும்ரா

கிரேடு ஏ (ரு.5 கோடி)

ஆர்.அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
சட்டேஸ்வர் புஜாரா
அஜிங்கியா ரகானே
ஷிகர் தவான்
கே.எல்.ராகுல்
முகமது ஷமி
இஷாந்த் சர்மா
ரிஷப் பந்த்
ஹர்திக் பாண்டியா

கிரேடு பி (ரு.3 கோடி)

விர்திமன் சாஹா
உமேஷ் யாதவ்
புவனேஸ்வர் குமார்
ஷர்துல் தாக்கூர்
மயங்க் அகர்வால்

கிரேடு சி (ரு.1 கோடி)

குல்தீப் யாதவ்
நவ்தீப் சைனி
தீபக் சாஹர்
சுப்மன் கில்
ஹனுமா விஹாரி
அக்ஸர் பட்டேல்
ஸ்ரேயாஸ் ஐயர்
வாஷிங்டன் சுந்தர்
யுவேந்திர சாஹல்
முகமது சிராஜ்

DCvsRR | கடைசி ஓவர்களில் சிக்சர்களை பறக்கவிட்ட கிறிஸ் மோரிஸ்... ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி

Published by:Arun
First published: