ரிஷப் பந்த் வரலாற்று பவுண்டரியை அடித்தவுடனேயே அணிக்கு ரூ. 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ தலைவர் கங்குலி

பார்டர் கவாஸ்கர் டிராபியுடன் இந்திய அணி.

பிரிஸ்பனில் இன்று ஆட்ட நாயகன் ரிஷப் பந்த் (89 நாட் அவுட்), ஹேசில்வுட் பந்தை மிட் ஆஃப் பவுண்டரிக்கு அனுப்பி வரலாற்று தொடர் வெற்றி, டெஸ்ட் வெற்றியைப் பெற்ற அந்தத் தருணத்திலேயே பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா இருவரும் இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

 • Share this:
  பிரிஸ்பனில் இன்று ஆட்ட நாயகன் ரிஷப் பந்த் (89 நாட் அவுட்), ஹேசில்வுட் பந்தை மிட் ஆஃப் பவுண்டரிக்கு அனுப்பி வரலாற்று தொடர் வெற்றி, டெஸ்ட் வெற்றியைப் பெற்ற அந்தத் தருணத்திலேயே பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலர் ஜெய் ஷா இருவரும் இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்து தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

  அயல்நாட்டு மண்ணில் இதைவிட சிறந்த வெற்றியை இதுவரை இந்திய அணி பெற்றதில்லை, எனவே இந்திய கிரிக்கெட்டின் பொற்காலம் இது என்றுதான் கூற வேண்டும், அதே வேளையில் உப்புக்காகித சுரண்டலில் வீணாய்ப்போன ஆஸ்திரேலியா ஸ்மித், வார்னர் வந்தும், டிம் பெய்ன் போன்ற உதவாக்கரை கேப்டனால் மேலும் வீணானது.

  இந்திய அணி தற்போது உலக அணிகளுக்கு அவர்கள் மண்ணிலேயே சவாலாகத் திகழ்கிறது. காரணம் இந்திய அணியின் புதிய வீரர்களும் காட்டும் உறுதி, பயமின்மை மற்றும் வெற்றிக்கான உந்துதல். சரியாக வழிநடத்தும் கோலி, ரஹானே, ரோஹித் போன்ற மூத்த வீரர்கள். பல விமர்சனங்களுக்கு இடையே ரிஷப் பந்த் மீது நம்பிக்கை வைத்ததற்கு அவர் கைவிடாமல் சிட்னி, பிரிஸ்பனில் வெளுத்துக் கட்டி இன்று அணியின் இன்றியமையாத வீரராகி விட்டார், விக்கெட் கீப்பராக நீடிக்க முடியாவிட்டாலும் அவரை இனி அணியிலிருந்து தூக்க முடியாது.

  வரும் தொடர்களில் இந்திய அணிக்கு மிகப்பெரிய தேர்வுச்சிக்கல்கள் காத்திருக்கின்றன.

  இந்நிலையில் பிசிசிஐ தலைவரான தாதா கங்குலி தன் டிவிட்டர் பக்கத்தில், “என்ன ஒரு வெற்றி!! ஆஸி.க்கு சென்று இப்படிப்பட்ட வெற்றியைப் பெறுவது சாதாரணமல்ல. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது நீண்ட கால நினைவைக் கொடுக்கும். பிசிசிஐ இந்திய அணிக்கு ரூ.5 கோடி போனஸ் அறிவிக்கிறது.

  இந்த வெற்றியின் மதிப்பு எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டது. பயணத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், வெல்டன்!” என்று பதிவிட்டுள்ளார்.

  ஜெய் ஷாவும் இந்திய அணியைப் பாராட்டியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: