Home /News /sports /

தென்ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு: ராகுல் கேப்டன்- தினேஷ் கார்த்திக்கு இடம்

தென்ஆப்பிரிக்காவுடனான டி20 தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு: ராகுல் கேப்டன்- தினேஷ் கார்த்திக்கு இடம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல் 2022 தொடர் மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. பெரும் ஆரவாரத்துடன் பலத்த எதிர்பார்ப்புடன் ஐ.பி.எல் 2022 தொடர் தொடங்கியது. இந்த தொடரில் வழக்கத்துக்கு மாறாக 10 அணிகள் பங்கேற்றன. ஐ.பி.எல் தொடங்கி சுமார் 2 மாதங்கள் கடந்த நிலையில் இன்றுடன் லீக் போட்டிகள் நிறைவடைகின்றன. ஏற்கெனவே, குவாலிபயர் சுற்றுக்கு 4 அணிகள் தேர்வாகியுள்ளன.

    முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ், இரண்டாம் இடத்தில் லக்னோ சூப்பர் ஜியன்ட் அணியும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல் அணியும், நான்காவது இடத்தை பெங்களூரு அணியும் பிடித்து குவாலியர் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள அணிகள் லீக் சுற்றோடு வெளியேறியுள்ளன. ஐ.பி.எல் தொடரில் வலிமையான அணிகளாக வலம்வந்த சென்னையும், மும்பை அணியும் இந்தமுறை கடைசி இரண்டு இடங்களைப் பிடித்து வெளியேறியுள்ளன.

    இந்தநிலையில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெறவுள்ளது.

    இந்தப் போட்டிகள் ஜூன் 9-ம் தேதி தொடங்கி ஜூன் 19-ம் தேதி நிறைவடையவுள்ளது. இந்தத் தொடரில் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியின் டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    18 பேர் கொண்ட டி20 இந்திய அணி:

    கே.எல்.ராகுல்(கேப்டன்), ரூத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஸ்ரேயாஷ் ஐயர், ரிஷப் பன்ட்(துணைக் கேப்டன்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.

    IPL 2022: ஒரு ஓவர் முழுதும் பீட்டன் ஆன இந்திய கேப்டன் ரோஹித் சர்மா- படுமோசமான பேட்டிங், ஐபிஎல் தொடர்

    17 பேர் கொண்ட டெஸ்ட் அணி:

    ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல்(துணைக் கேப்டன்), ஷப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹஹூமா விஹாரி, சேட்டேஷ்வர் புஜாரா, ரிஷப் பன்ட், கே.எஸ்.பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வீன், ஷ்ரதல் தாகுர், முகம்மது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகம்மது சிராஜ், உமேஷ் யாதவ், ப்ரசித் கிருஷ்ணா.
    Published by:Karthick S
    First published:

    Tags: T20, Team India

    அடுத்த செய்தி