முகப்பு /செய்தி /விளையாட்டு / டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஜூனியர் அணிக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஜூனியர் அணிக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு

இந்திய ஜூனியர் மகளிர் அணி

இந்திய ஜூனியர் மகளிர் அணி

உலகக்கோப்பையை வென்ற மகளிர் ஜூனியர் அணிக்கு வாழ்த்துக்கள். இளம் கிரிக்கெட்வீராங்கனைகளால் மிகப்பெரிய சாதனை நடத்தப்பட்டுள்ளது. – ஜெய் ஷா

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஜூனியர் அணிக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஜூனியர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கு முதன் முறையாக இந்த போட்டி நடத்தப்பட்ட நிலையில், இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய ஜூனியர் மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்து.

இதையடுத்து 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களத்தில் இறங்கியது. தொடக்க வீராங்கனையாக விளையாடிய கேப்டன் ஷபாலி வர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீராங்கனை ஸ்வேதா ஷெராவத் 5 ரன்னில் வெளியேற, அடுத்து இணைந்த சவுமியா திவாரி – கோங்கடி திரிஷா இணை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ரன்னுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் இந்த இருவரும் பார்ட்னர் ஷிப் அமைக்கத் தொடங்கினர். சவுமியா 37 பந்துகளில் 24 ரன்னும், கோங்கடி திரிஷா 29 பந்தில் 24 ரன்னும் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தனர். 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி, உலகக்கோப்பையை வென்றது.

இந்நிலையில் கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு ரூ. 5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- உலகக்கோப்பையை வென்ற மகளிர் ஜூனியர் அணிக்கு வாழ்த்துக்கள். இளம் கிரிக்கெட்வீராங்கனைகளால் மிகப்பெரிய சாதனை நடத்தப்பட்டுள்ளது. ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய அணியை நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3ஆவது டி20 போட்டியை காண்பதற்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திற்கு அழைக்கிறேன். இந்திய மகளிர் அணிக்கு ரூ. 5 கோடியை பரிசுத் தொகையாக பிசிசிஐ அறிவிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

First published:

Tags: Cricket