ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: அதிரடி மாற்றங்கள்!

#BCCI Announced #India’s squad for #AustraliaSeries | இரு அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. #INDvAUS #TeamIndia #IndianSquad

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: அதிரடி மாற்றங்கள்!
இந்திய கிரிக்கெட் அணி. (BlackCaps)
  • News18
  • Last Updated: February 15, 2019, 5:54 PM IST
  • Share this:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒரு நாள் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி-20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

Australia Team, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. (ICC)



இரு அணிகள் இடையிலான முதலாவது டி-20 போட்டி வரும் 24-ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2-வது மற்றும் கடைசி டி-20 போட்டி 27-ம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளது. இதனையடுத்து, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மார்ச் 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு மும்பையில் இன்று (பிப்.15) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 மற்றும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)
டி-20 தொடருக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, க்ருனல் பாண்டியா, விஜய் சங்கர், சாஹல், பும்ரா , உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயங்க் மார்கண்டே.

ஒரு நாள் தொடரில் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, முகமது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பண்ட், சித்தார்த் கவுல், கே.எல்.ராகுல்.

கடைசி 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), ஷிகர் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, விஜய் சங்கர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்.

இதுவா நேரம்? கோலியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Also Watch... உலகக் கோப்பைக்கு ரிஷப் பண்ட் ஏன் தேவை? நெஹ்ரா சொல்லும் 5 காரணங்கள்!

First published: February 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்