• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரோஹித் தலைமையில் நியூசிலாந்து தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு- கோலி, பும்ராவுக்கு ஓய்வு

ரோஹித் தலைமையில் நியூசிலாந்து தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு- கோலி, பும்ராவுக்கு ஓய்வு

பிசிசிஐ

பிசிசிஐ

நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

  • Share this:
    ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து டி20 உலகக் கோப்பைத் தொடர் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்திய அணி பாகிஸ்தான் எதிரானப் போட்டி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி என்று அடுத்தடுத்த படுதோல்வியடைந்தது. அதனால், இந்திய ரசிகர்கள் கடும் கோபத்துக்கு ஆளானார்கள்.

    ஐ.பி.எல் போட்டிகளுக்கு பி.சி.சி.ஐ முக்கியத்துவம் அளிப்பதால்தான் தோல்வி என ஐ.பி.எல்லுக்கு எதிராக கொந்தளித்தனர். இந்திய ரசிகர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அடுத்த மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆறுதல் வெற்றியுடன் டி20 தொடரிலிருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி. கோலியின் கேப்டன் சகாப்தம் தோல்வியுடன் முடிவடைந்துள்ளது. இந்தத் தொடருடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

    இந்தநிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு நியூசிலாந்து அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. நவம்பர் 17-ம் தேதி இந்தப் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்தத் தொடருக்கு 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரூத்ராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐய்யர், யஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்தர் அஸ்வின், அக்ஷர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் பட்டேல், முகம்மது சிராஜ். இந்தத் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் 17 முதல் போட்டி ஜெய்பூரிலும், 19-ம் தேதி ராஞ்சியில் இரண்டாவது போட்டியும், 21-ம் தேதி கொல்கத்தாவில் மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: