பந்தை சட்டையில் வைத்து கொண்டு ஓடிய பேட்ஸ்மேன்.. விழிபிதுங்கிய பவுலர் - சுவாரஸ்ய வீடியோ
BBL 2020 - 21 | இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 169 ரன்கள் எடுத்தது.

- News18 Tamil
- Last Updated: December 13, 2020, 8:35 PM IST
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் போட்டியில் பந்தை சட்டையில் வைத்து கொண்டு ஓடிய பேட்ஸ்மேன் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
ஆஸ்திரேலியா பிக் பாஷ் லீக்கில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் 37 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அணியின் கேப்டன் மேகஸ்வெல் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இதனிடையே இந்த போட்டியில் 19-வது ஓவரை டேனியல் சாம்ஸ் வீசினார். அதனை நிக் லார்கின் எதிர்கொண்டு விளையாடினார். நிக் லார்கின் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டின் மீது பட்டு பேட்ஸ்மேனனின் சட்டைக்குள் சென்றுவிட்டது.
பந்து சட்டைக்குள் போனதும் அதனுடன் சென்று ஒரு ரன் எடுத்தார் நிக் லார்கின். பேட்ஸ்மேனை ரன் அவுட்டாக்க வேகமாக வந்த பவுலர் நிக் லார்கின் பந்தை காணமல் விழிபிடுங்கி நின்றார். அதன்பின் பந்து பேட்ஸ்மேனின் சட்டைக்குள் மாட்டிக் கொண்டது தெரிய வந்தது. இதனால் மைதானத்தில் சில நொடிகள் சிரிப்பலை எழுந்தது.
மேலும் இந்தப் போட்டியில் சிட்னி தண்டர் 20 ஓவர்கள் முடிவில் 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் மேக்ஸ்வெலின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா பிக் பாஷ் லீக்கில் நேற்று (டிசம்பர் 12) நடைபெற்ற போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தப் போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் 37 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அணியின் கேப்டன் மேகஸ்வெல் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
Hide the ball and run! Bit cheeky here from Nick Larkin... 😝A @KFCAustralia Bucket Moment | #BBL10 pic.twitter.com/M4T4h2l3g6
— KFC Big Bash League (@BBL) December 12, 2020