ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பேட்டிங்கா? பவுலிங்கா? டாஸ் வென்ற பின் அணியின் முடிவை மறந்து தவித்த கேப்டன்…

பேட்டிங்கா? பவுலிங்கா? டாஸ் வென்ற பின் அணியின் முடிவை மறந்து தவித்த கேப்டன்…

அணியின் முடிவை மறந்த கேப்டன் ரோஹித் சர்மா

அணியின் முடிவை மறந்த கேப்டன் ரோஹித் சர்மா

30 வினாடிகள் ஓடும் க்யூட்டான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அடித்து வரும் கமென்ட்டுகள் ரசிக்கும்படி உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்றார். இதன்பின்னர் பேட்டிங்கா பவுலிங்கா என்பதை தேர்வு செய்ய முடியாமல் 10 வினாடிகள் யோசனையில் தவித்தார். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கஜினி ஆமிர்கானின் மீம்ஸ் ஃபோட்டோக்களை கமென்ட் அடித்த கிண்டல் செய்துள்ளனர்.

முதல் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து 2ஆவது போட்டி சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக டாஸ் சுண்டப்பட்டது. ஆட்டத்தின் நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் முன்பாக நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம், வர்ணனையாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நிற்க, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸை சுண்டினார். டாம் லாதம் ஹெட் என கேட்க, டாஸில் டெய்ல் விழுந்ததால் ரோஹித் சர்மா டாஸில் வெனறதாக அறிவிக்கப்பட்டது.

இதைடுத்து பேட்டிங்கா, பவுலிங்கா என நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் கேட்க, என்ன முடிவு எடுத்தோம் என்பதை மறந்து 10 வினாடிகள் கேப்டன் ரோஹித் சர்மா யோசனையால் தவித்தார். கடைசியில் பவுலிங் ஃபர்ஸ்ட் என்று முடிவை அவர் அறிவித்தார். இதுதொடர்பாக 30 வினாடிகள் ஓடும் க்யூட்டான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அடித்து வரும் கமென்ட்டுகள் ரசிக்கும்படி உள்ளன. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் போட்டியில் பெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.  கடந்த மேட்ச்சில் விளையாடிய சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் முகம்மது ஷமி மற்றும் முகம்மது சிராஜுடன் ரோஹித் சர்மா களமிறங்கியுள்ளார்.

First published:

Tags: Cricket