பவுலர்கள் மட்டும் இடது கை வீசினால் சொல்ல வேண்டும், ஓவர் த விக்கெட், ரவுண்ட் த விக்கெட் என்றெல்லாம் சொல்ல வேண்டும் ஆனால் பேட்டர்கள் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் ஆடலாமா, எனவே ரூல்ஸை மாற்ற வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், உலக அரங்கிற்கு வந்தது முதல் பேமஸ் ஆனது இந்த சுவிட்ச் ஹிட், அதாவது ரிவர்ஸ் ஸ்வீப் அல்ல, இது , ஸ்டான்ஸையே மாற்றி பேட்டையே இடது கை வீரர் போல் பிடித்து ஒரு ஜம்ப்பில் இடவலம் மாறி அடிக்கும் பழக்கம் பேமஸ் ஆனது. ஒருமுறை நியூசிலாந்துக்கு எதிராக கெவின் பீட்டர்சன் அடித்த 5 சிக்சர்களும் இடது கையில் அடிக்கப்பட்ட சிக்சர்களே. உலகமே மிரண்டு போனது.
பிறகு ஏ.பி.டிவிலியர்ஸ் இதே வகை பேட்டிங்கில் மேன் மேலும் புதுமைகளைப் புகுத்தி உலக பவுலர்களை மிரள வைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் இது தகுமா? இது முறைய என்று ஒரு பவுலராக அஸ்வின் வினவுகிறார்.
யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் கிட்டத்தட்ட 10 முறை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ஆடினார். அதில் ஒன்று மட்டுமே பேட்டில் பட்டது. ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுவதால் ஒரு பேட்ஸ்மேன் எந்த அறிவிப்பும் இன்றி தனது பேட்டை பிடிக்கும் ஸ்டைலை மாற்றும் நிலை உள்ளது.
இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு பந்து வீச்சாளர் எந்த முறையில் பந்து வீசுகிறார் என்பதை நடுவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதே போல் பவுன்சர் பந்து வீச கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் பேட்ஸ்மேன்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் அவர்கள் பேட்டிங் செய்யலாம்.
அதனால் பாதிப்பு பவுலர்களுக்கு தான். எனவே ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்விட்ச் ஹிட் வகையில் பேட்ஸ்மேன் அடிக்கும் போது, பந்து லெக்-ஸ்டம்பு வெளியே 'பிட்ச்'ஆகி பேட்டில் படாமல் அது கால்காப்பில் பட்டால் அதற்கும் எல்.பி.டபிள்யூ. வழங்கும் வகையில் விதிமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அது தான் இந்த விஷயத்தில் நியாயமானதாக இருக்கும்.
இவ்வாறு கூறுகிறார் அஸ்வின்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.