Home /News /sports /

இந்தியாவின் கடினமான தேர்வு கிரிக்கெட் நடுவர் தேர்வுதான் -140 பேரில் 3 பேர் தேர்ச்சி

இந்தியாவின் கடினமான தேர்வு கிரிக்கெட் நடுவர் தேர்வுதான் -140 பேரில் 3 பேர் தேர்ச்சி

வெங்கட்ராகவன்

வெங்கட்ராகவன்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அகமதாபாத்தில் நடுவர்களுக்கான லெவல்-2 தேர்வை நடத்தியது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், குழு D போட்டிகளில் - பெண்கள் மற்றும் ஜூனியர் போட்டிகளில் - நடுவராக செயல்படுவதற்கு தகுதி பெறுவார்கள் - இது உயர்மட்ட BCCI நடுவராக மாறுவதற்கும் சர்வதேச விளையாட்டுகளில் நிற்பதற்கும் முதல் படியாகும்.

மேலும் படிக்கவும் ...
 • Cricketnext
 • 2 minute read
 • Last Updated :
  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அகமதாபாத்தில் நடுவர்களுக்கான லெவல்-2 தேர்வை நடத்தியது. தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், குழு D போட்டிகளில் - பெண்கள் மற்றும் ஜூனியர் போட்டிகளில் - நடுவராக செயல்படுவதற்கு தகுதி பெறுவார்கள் - இது உயர்மட்ட BCCI நடுவராக மாறுவதற்கும் சர்வதேச விளையாட்டுகளில் நிற்பதற்கும் முதல் படியாகும்.

  தகுதி பெற, ஒருவர் குறைந்தபட்சம் 200க்கு 90 மதிப்பெண்கள் (எழுத்துத் தேர்வுக்கு 100, வைவா அதாவது நேர்முகத்தேர்வு மற்றும் வீடியோவுக்கு 35, உடல் தகுதிக்கு 30) பெற்றிருக்க வேண்டும். தொற்றுநோய்க்குப் பிறகு முதல் முறையாக உடல் பரிசோதனை சேர்க்கப்பட்டது, நடுவரின் அதிகரித்து வரும் உடல் தேவைகளை மனதில் வைத்து, வீடியோ தேர்வில் ஒரு போட்டியின் சூழ்நிலையை வைத்துக் குறிப்பிட்ட கேள்விகள் கேட்கப்படும், அப்போது அந்த நடுவர் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி அவர் பதில் சொல்ல வேண்டும்.

  இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் செயல்முறை தேர்வு அதாவது பிராக்டிகல்ஸில் சிறப்பாக செயல்பட்டனர், ஆனால் எழுத்துத் தேர்வுக்கு வந்தபோது, ​​அவர்களுக்குக் கடினம் காத்திருந்தது.  140 விண்ணப்பதாரர்களில், 3 பேர் மட்டுமே தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு முன்னேற முடிந்தது.

  தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்றால், மீதமுள்ள 137 வேட்பாளர்களின் நம்பிக்கையை சிதைத்த சில  கேள்விகளை பார்க்க வேண்டும்:

  கேள்வி: பெவிலியன் கட்டடம், மரம் அல்லது பீல்டரின் நிழல் ஆடுகளத்தில் விழ ஆரம்பித்தால், பேட்ஸ்மேன் புகார் செய்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

  விடை: நிழல் புறக்கணிக்கப்பட வேண்டும் மற்றும் பீல்டர்களை நிலையாக இருக்கும்படி கேட்க வேண்டும் அல்லது நடுவர் டெட் பால் கொடுக்க வேண்டும்.

  அடுத்த கேள்வி: ஒரு வீரரின் பந்துவீசும்கையின் ஆள்காட்டி விரலில் உண்மையான காயம் ஏற்பட்டுள்ளது,அதனால் அவர் டேப் சுற்றியுள்ளார்,  டேப்பை அகற்றினால் இரத்தப்போக்கு ஏற்படும் என்பதில் நீங்கள் திருப்தி அடைகிறீர்கள். பந்துவீசும்போது பாதுகாப்பு நாடாவை அகற்றும்படி நீங்கள் இன்னும் அவரிடம் கேட்பீர்களா?

  விடை:பவுலர் பந்து வீச வேண்டுமென்றால் விரலில் உள்ள நாடாவை அவிழ்த்து விட்டுத்தான் வீச வேண்டும், நாடாவுடன் வீச அனுமதியில்லை.

  அடுத்த கேள்வி: ஒரு பேட்டர் பந்தை அடிக்கிறார், பந்து ஷார்ட் லெக் பீல்டர் ஹெல்மெட்டில் சிக்கிக் கொள்கிறது அதே வேளையில் பந்து பட்டதன் தாக்கத்தினால் ஹெல்மெட் பீல்டர் தலையிலிருந்து கழல்கிறது. ஆனால் பந்து இன்னும் ஹெல்மெட்டில்தான் சிக்கியிருக்கிறது என்றால் ஹெல்மெட் விழும்போது பீல்டர் அதைப் பிடிக்கிறார் என்றால் அது கேட்சா? உங்கள் தீர்ப்பு என்ன?

  இதற்கான விடை: இது நாட் அவுட். 

  இப்படியாக கேள்விகள் மேட்ச் சூழ்நிலையையும் கற்பனையான சூழ்நிலையை வரித்தும் கேட்கப்பட்ட போது பலரும் சொதப்பிவிட்டனர்.

  நடுவர் பணி என்பது கடினமான ஒன்று. விதிமுறைகளுக்கேற்ப அப்படியே காபிபுக் ஸ்டைலில் பண்ணுவது மட்டும் போதாது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஸ்மார்ட்டாக செயல்படுவதும் அவசியம், எனவே தான் இந்தியாவில் அம்பயரிங் பரீட்சை மட்டும் மிகமிகக் கடினமானது, ரொம்பக் கம்மியானவர்களே அதில் பாஸ் செய்ய முடியும்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: BCCI, Umpire

  அடுத்த செய்தி