பேட்கள் எப்போதும் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போலும்: வர்ணனையில் தினேஷ் கார்த்திக் ஜோக்

தினேஷ் கார்த்திக்.

இவரது நகைச்சுவையான ‘ஒன் - லைனர்கள்’ ஆங்கில வர்ணனையாளர்களையும் ஈர்த்து வருகிறது.

 • Share this:
  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது தன் புதிய இன்னிங்ஸான ஆங்கில வர்ணனையில் கால்பதித்து மட்டை சுழற்றும் தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரிலும் தன் வர்ணனை மூலம் கலக்கி வருகிறார்.

  இவரது நகைச்சுவையான ‘ஒன் - லைனர்கள்’ ஆங்கில வர்ணனையாளர்களையும் ஈர்த்து வருகிறது.

  இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையில் கியா ஓவலில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் வர்ணனையில் இருந்த தினேஷ் கார்த்திக் பேட்ஸ்மென்களின் பொதுவான ஒரு மனப்போக்கை நகைச்சுவை உணர்வுடன் கூறியது பலருக்கும் சிரிப்பை வரவழைத்தது.

  Also Read: Sri Lanka vs India | 20 வீரர்களில் 14 வீரர்கள் இந்திய சீனியர் அணிக்கு ஆடியவர்கள்: ரணதுங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியமே பதிலடி

  எப்போதும் நம் வீட்டில் ஏதாவது பண்டங்கள் செய்தால் நாம் அதை புகழ மாட்டோம், அன்று அந்த வீட்டில் நன்றாக செய்தார், இதை விட அது நன்றாக இருந்தது, இன்னொன்று பிரமாதம், சூப்பர் என்று எப்போதும் வேறொன்றைத்தான் நாம் புகழும் வழக்கமுடையவர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த மனப்போக்கை பேட்ஸ்மென்கள் தாங்கள் விளையாடும் பேட்களிலும் காட்டுகிறார்கள் என்பதை தினேஷ் கார்த்திக் கிண்டல் செய்யும் விதமாகக் கூறுகையில், எந்த பேட்ஸ்மெனுக்கும் தங்கள் வைத்திருக்கும் மட்டைகள் பிடிப்பதில்லை. பேட்ஸ்மென்களும், பிடிக்காத மட்டைகளும் இணை நிகழ்வுகள், இணை மனநிலைகள், பல பேட்ஸ்மென்கள் தாங்கள் வைத்திருக்கும் மட்டைகளை விரும்புவதில்லை. அடுத்த வீரர் வைத்திருக்கும் பேட்களைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். பேட்கள் பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி போலும், நம்மிடம் இருப்பதை விட இன்னொன்று சிறந்தது, அழகானது என்று நினைக்கிறார்கள். எப்போதுமே நம்மிடம் இருப்பதை விட வேறொன்றுதான், இன்னொன்றுதான் சிறந்தது என்று நினைக்கிறோம் என்று நகைச்சுவையாக ஒரு ஜோக் மூலம் இயல்பான மனநிலையைப் பற்றி விவரித்தார்.

  இந்தியா-இங்கிலாந்து தொடருக்கும் தினேஷ் கார்த்திக் ஸ்கை ஸ்போர்ட்ஸ் வர்ணனைக் குழுவில் இடம்பெறுவார் என்றே தெரிகிறது.
  Published by:Muthukumar
  First published: