தோனியிடம் நான் கற்றுக் கொண்ட பாடம்... மீண்டும் அந்த தவறை மட்டும் செய்யமாட்டேன் - வங்கதேச வீரர்

2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது சபீர் ரகுமானை தோனி ஸ்டெம்பிங் செய்தார்.

தோனியிடம் நான் கற்றுக் கொண்ட பாடம்... மீண்டும் அந்த தவறை மட்டும் செய்யமாட்டேன் - வங்கதேச வீரர்
  • Share this:
வங்கதேச வீரர் சபீர் ரகுமான் 2016 டி20 உலகக் கோப்பையின் போது தோனி ஸ்டெம்பிங் செய்தது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்கள் அனைவரும் தங்களது நேரத்தை இணையத்தில் கழித்து வருகின்றனர்.

வங்கதேச வீரர் சபீர் ரகுமான் ஃபேஸ்புக் நேரலையின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் ஸ்டெம்பிங்கானது குறித்து பேசினார். 2016-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது சபீர் ரகுமானை தோனி ஸ்டெம்பிங் செய்தார். இதனால் பரபரப்பாக சென்ற போட்டியின் முடிவுக்கு இந்தியாவிற்கு சாதகமாக முடிந்தது. சபீர் ரகுமானின் விக்கெட் இந்த போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.


இது குறித்து சபீர் ரகுமான் கூறுகையில், “ 2016 டி20 உலகக் கோப்பையில் என்னை தோனி ஸ்டெம்பிங் செய்திருந்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கோப்பையின் போதும் தோனிக்கு அதுப்போன்ற வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த முறை அவர் என்னை ஸ்டெம்பிங் செய்வதற்கு முன் கிரீஸ்க்குள் இருந்தேன். ஏனென்றால் கிரீஸ்க்கு வெளியே இருந்தால் என்ன நடக்குமென்று அவரிடம் இதற்கு முன்பே நான் பாடம் கற்று இருந்தேன். மேலும் அவரிடம் கூறினேன், இன்று முடியாது“ என்று கூறியதை நினைவுப்படுத்தினார்.

மேலும் தோனியின் பேட்டிங் ரகசியத்தை ஒன்றை அவரிடம் கேட்டேன். நீங்கள் விளாசுவது எப்படி சிக்சருக்கு போகிறது என்று அதற்கு அவர் “எல்லாம் தன்னம்பிக்கையில் தான் இருக்கிறது“ என்றார் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading