WIvBAN | மேற்கிந்திய தீவுகளை துவம்சம் செய்த வங்கதேச அணி அபார வெற்றி!

ICC World Cup 2019 | WestIndies vs Bangladesh | ஆல்ரவுண்டர் சகிப்-உல்-ஹசன் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார்.

Vijay R | news18
Updated: June 17, 2019, 10:56 PM IST
WIvBAN | மேற்கிந்திய தீவுகளை துவம்சம் செய்த வங்கதேச அணி அபார வெற்றி!
ICC World Cup 2019 | WestIndies vs Bangladesh | ஆல்ரவுண்டர் சகிப்-உல்-ஹசன் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார்.
Vijay R | news18
Updated: June 17, 2019, 10:56 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சகிப்-உல்-ஹசனின் அதிரடியான சதத்தால் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடரின் 23வது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள், வங்கதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்களாக கெயில், லூயிஸ்  களமிறங்கினர். அதிரடி ஆட்டக்காரர் கெய்ல், சைபதீன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹோப், லூயிஸ் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லூயிஸ் 70 ரன்னிலும், ஹோப் 96 ரன்களிலும் அவுட்டாகினர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் மற்ற வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுப்பட்டனர். ஷிம்ரான் ஹெட்மியர் 26 பந்துகளில் அரைசதம் விளாசி வங்கதேச பவுலர்களை திணறவிட்டார்.



மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான கெய்ல், ரஷல் டக் அவுட்டாகியது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.  மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு வலுசேர்த்தனர். வங்கதேச அணி சார்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி தொடக்க வீரர் சௌமியா சர்கார் 29 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஆல்ரவுண்டர் சகிப்-உல்-ஹசன் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார்.



மறுமுனையில் தமீம் இக்பால் 48 ரன்களிலும், ரஹிம் 1 ரன்னிலும் அவுட்டாகினார். 5வது வீரராக களமிறங்கிய லிட்டன் தாஸ், சகிப்-உல்-ஹசனின் அதிரடிக்கு கைகொடுத்தார். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் வங்கதேச அணி 41.3 ஓவர்களில் இலக்கை எட்டி  7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Also Watch

First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...