ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இறுதி ஓவரின் கடைசி பந்தில் வங்கதேச அணிக்கு காந்திருந்த பெரிய டிவிஸ்ட்: கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு ஜிம்பாப்வே தோல்வி!

இறுதி ஓவரின் கடைசி பந்தில் வங்கதேச அணிக்கு காந்திருந்த பெரிய டிவிஸ்ட்: கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு ஜிம்பாப்வே தோல்வி!

கடைசி ஓவரில் ஏற்பட்ட குழப்பங்கள்

கடைசி ஓவரில் ஏற்பட்ட குழப்பங்கள்

கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்து ஸ்டெம்பை எல்லாம் வீரர்கள் எல்லாம் பிடிங்கி சென்றவுடன் வங்கதேச அணிக்கு அதிர்ச்சி காத்திருந்ததது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • international, IndiaAustraliaAustraliaAustralia

  கடைசி ஓவரில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ஜிம்பாப்வே அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றது.

  டி20 உலககோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றின் குரூப் -2 போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாவே அணிகள் மோதின. பிரிஸ்பானில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வாங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி தொடக்க வீரர் சாண்டோ சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார்.

  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 55 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது. ஜிம்பாவே தரப்பில் முசரம்பனி மற்றும் நாகர்வா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாவே அணி தொடக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து பொறுப்புடன் ஆடிய சென் வில்லியம்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல கடுமையாக பாடுபட்டார். இருப்பினும் 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்திருந்த சென் வில்லியம்ஸ் 18.4 ஓவரில் ரன் ஆவுட் ஆகி வெளியேறியதால் ஆட்டம் வங்கதேச அணிக்கு திரும்பியது.

  ஜிம்பாவே அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் டெக் பைசில் ஒரு ரன் கிடைத்தது. அடுத்த பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்த பிரட் எவன்ஸை பவுண்டரி எல்லைக்கு கிட்டே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

  இதையும் படிங்க:  ஜடேஜாவை டெல்லி அணிக்கு கொடுத்துவிட்டு அங்கு இருக்கும் 2 முக்கிய வீரர்களை தூக்க சென்னை அணி திட்டம்?

  3வது பந்தில் லெக்பைஸ் மூலம் 4 ரன்கள் கிடைக்க, 4வது பந்தை காரவா சிக்சருக்கு விளாசினார். அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த முசாராபானி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்க, வங்கதேச வீரர்கள் வெற்றிப்பெற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

  கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்து ஸ்டெம்பை எல்லாம் வீரர்கள் எல்லாம் பிடிங்கி சென்றவுடன் வங்கதேச அணிக்கு  காத்திருந்தது அதிர்ச்சி. ரீப்பிளேவில் ஸ்டம்புக்கு முன்பாக பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்யப்பட்டது தெரியவந்ததால், நடுவர்கள் அந்த பந்தை நோபாலாக அறிவித்தனர். பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்த வங்கதேச வீரர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ப்ரீஹிட் பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மற்றொரு வாய்ப்பு

  ஜிம்பாப்வே அணிக்கு தேடி வந்தது. அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டதால் வங்கதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Bangladesh, T20 World Cup, Zimbabwe