Home /News /sports /

SA vs BAN-இந்தியா செய்ய முடியாததை செய்த வங்கதேசம்- தென் ஆப்பிரிக்கா தவிடுபொடி- வரலாற்று வெற்றி

SA vs BAN-இந்தியா செய்ய முடியாததை செய்த வங்கதேசம்- தென் ஆப்பிரிக்கா தவிடுபொடி- வரலாற்று வெற்றி

வரலாறு படைத்த வங்கதேசம்

வரலாறு படைத்த வங்கதேசம்

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று 0-3 என்று ஒயிட் வாஷ் வாங்கியது இந்திய அணி, ஆனால் நம்மை விட பல விதங்களில் பலம் குறைந்த அணியாகக் கருதப்படும் வங்கதேசம் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை 2-1 என்று வெற்றி பெற்று அங்கு முதல் ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது.

மேலும் படிக்கவும் ...
  தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று 0-3 என்று ஒயிட் வாஷ் வாங்கியது இந்திய அணி, ஆனால் நம்மை விட பல விதங்களில் பலம் குறைந்த அணியாகக் கருதப்படும் வங்கதேசம் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை 2-1 என்று வெற்றி பெற்று அங்கு முதல் ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்தது. தஸ்கின் அகமட் 5 விக்கெட்டுகளை வீழ்த்த பிறகு தமிம் இக்பால் 82 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

  செஞ்சூரியனில் நடைபெற்ற இந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய முடிவெடுத்து தனக்கே குழிதோண்டிக்கொண்டது. 46/0 என்ற நிலையிலிருந்து மகா கொலாப்ஸ் ஏற்பட அடுத்த 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களுக்கு மடிந்தது. தஸ்கின் அகமட் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி ரபாடா, லுங்கி இங்கிடி, தப்ரைஸ் ஷம்சி, மகராஜ் இருந்தும் கேப்டன் தமீம் இக்பால் வெளுத்து வாங்கி 87 நாட் அவுட் என்று வெற்றுக்கு இட்டுச் சென்றார். லிட்டன் தாஸ் 48 நாட் அவுட்.

  20 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா உள்நாட்டில் வங்கதேசத்திடம் தோற்றதில்லை. தெம்பா பவுமா பவுலிங் சாதகப் பிட்சில் பேட்டிங் தேர்வு செய்து தவறிழைத்தார். ஆக்ரோஷமாக ஆடுகிறோம் பேர்வழி என்று சிங்கிள், இரண்டு என்று பேட்டிங்கை நிலை நிறுத்தாமல் பவுண்டரி அடிக்கப் பார்த்து காலியாகினர். கடைசியில் வங்கதேசத்துக்கு எதிராக ஆகக்குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆகினர். 46/0 என்ற நிலையில் மெஹதி ஹசன் மிராஸ் குவிண்டன் டி காக் (12) விக்கெட்டை காலி செய்ய ஆரம்பித்தது மார்ச்ஃபாஸ்ட்.  இதைப் பயன்படுத்திய தஸ்கின் உடனடியாக வெரைனை வீழ்த்தினார், 39 ரன்கள் எடுத்து அதிக தனிப்பட்ட ஸ்கோரில் முடிந்த மலான் மேலேறி வந்தார் தஸ்கின் ஷார்ட் பிட்ச் பந்தை வீச எட்ஜ் ஆகி வெளியேறினார். தஸ்கின் தன் 2வது ஸ்பெல்லுக்கு வந்த போது டிவைன் பிரிடோரியஸ் விக்கெட்டை எடுத்தார். டேவிட் மில்லர் லெக் சைடில் கேட்ச் ஆனார். இந்த 2 விக்கெட்டுகளுக்கும் பிரதான காரணம், அதற்கு முந்தைய ரன்னில்லாத பந்துகளாகும். கேகிசோ ரபாடா தஸ்கின் அகமதுவின் 5வது விக்கெட்டாக வெளியேற மகராஜ் (28) ரன் அவுட் ஆக 37வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 154 ஆல் அவுட்.

  ரபாடாவை வெளுத்து வாங்கிய தமீம் இக்பால், லிட்டன் தாஸ்

  சரி! பிட்சில் தான் ஏதோ இருக்கிறது என்று பார்த்தால் தமீம், லிட்டன் தாஸ் பேட்டிங் அந்த சந்தேகத்தை தவிடுபொடியாக்கியது. 7 ஓவர் வரை நிதானம் காட்டிய தமிம் இக்பால், பிறகு லுங்கி இங்கிடியை 2 பவுண்டரிகளையும், உலகின் சிறந்த பவுலர் ரபாடாவை தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளையும் விளாசித்தள்ளினார். 18வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் தொடக்க வீரர்கள் லிட்டன், தமீம் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர். வெளிநாட்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் 7வது தொடக்க சதக்கூட்டணியாகும் இது.

  21வது ஓவரில் 48 ரன்களில் லிட்டன் தாஸ் மகராஜ் பந்தை கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 48 ரன்களில் 8 பவுண்டரிகள் விளாசினார் லிட்டன். இருவரும் 127 ரன்களைச் சேர்த்ததில் தமீம் அதிக பங்களிப்பு செய்தார். 82 பந்துகளில் 87 ரன்கள் விளாசிய தமீம் அதில் 14 பவுண்டரிகளை அடித்தார். தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வெளுத்து கட்டினார் தமீம். 2007 உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்த தமீம் தீவிரமாக ஆடிய சிறுவனாக அப்போது இருந்தார், இப்போதும் அதே ஆக்ரோஷம், தீவிரம் அவரிடம் காணப்பட்டது, அன்று ஜாகீர் கானை இறங்கி வந்து சிக்ஸ் அடித்தார், இன்று ரபாடாவை 4 பவுண்டரிகள் விளாசினார். 26.3 ஓவர்களில் 156/1 என்று அபார வெற்றி பெற்று தொடரை வென்று வரலாறு படைத்தது. ஆட்ட நாயகன் தொடர் நாயகன் இரண்டுமே தஸ்கின் அகமட்தான்.

  மார்ச் 31ம் தேதி இரு அணிகளும் முதல் டெஸ்ட்டில் மோதுகின்றன.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Bangladesh, Cricket, ODI, South Africa

  அடுத்த செய்தி