Home /News /sports /

வங்கதேச ‘டான் பிராட்மேன்’ முஷ்பிகுர் ரஹீம் டி20-யிலிருந்து ஓய்வு

வங்கதேச ‘டான் பிராட்மேன்’ முஷ்பிகுர் ரஹீம் டி20-யிலிருந்து ஓய்வு

Mushfiqur Rahim

Mushfiqur Rahim

தன்னை வங்கதேச ரசிகர்கள் டான் பிராட்மேன் என்று அழைக்கின்றனர் என்று கூறி ட்விட்டர் கிரிக்கெட் ரசிகர்களால் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் டி20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தன்னை வங்கதேச ரசிகர்கள் டான் பிராட்மேன் என்று அழைக்கின்றனர் என்று கூறி ட்விட்டர் கிரிக்கெட் ரசிகர்களால் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் டி20 சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    35 வயதாகும் முஷ்பிகுர்  2005-ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் டெஸ்ட்டில் அறிமுகமானார். 2006-ல் ஒருநாள், டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். இதுவரை 82 டெஸ்ட்களில் 5235 ரன்கள், 236 ஒருநாள் போட்டிகளில் 6,774 ரன்கள்,  டெஸ்ட்டில் 9 சதம், ஒருநாள் போட்டிகளில் 8சதம்,  102 சர்வதேச டி20-க்களில் 6 அரைசதங்களுடன் 1,500 ரன்கள் எடுத்துள்ளார்.

    விக்கெட் கீப்பிங்கில் டெஸ்ட்டில் 123 கேட்ச் 15 ஸ்டம்பிங், ஒருநாள் போட்டிகளில் 203கேட்ச்கள், 51 ஸ்டம்பிங், சர்வதேச டி20-இல் 42 கேட்ச் 30 ஸ்டம்பிங் என்று பின்னி எடுத்துள்ளார்.  நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் 2 போட்டிகளில் 5 ரன்களையே எடுத்துள்ளார்.

    இதனையடுத்து 3 வடிவ போட்டிகளிலும்  ஆடுவது கடினம், இனி ஒருநாள், டெஸ்ட்களில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார். வங்கதேச பிரிமியர் லீக் போன்ற உள்நாட்டு டி20 போட்டிகளில் ஆடவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ரோஹித் சர்மா செய்த இமாலயத் தவறுகள், அர்ஷ்தீப் சிங் விட்ட கேட்ச், கோலியின் கடைசி ’டாட்’பால்கள்- இந்திய அணியின் தோல்விக்கு காரணம் இவைதான்

    உண்மையில் வங்கதேச அணிக்கு பெரிய அளவில் பங்களிப்புச் செய்தவர் முஷ்பிகுர் ரஹிம், ஒருமுறை சேவாக் இவரை ஸ்லெட்ஜிங் செய்த போது, ‘பள்ளிக்கூட சிறுவன்’ ‘ஹோம் ஒர்க் செய்யாமல் இங்கு என்ன வேலை?’ என்று கேலி செய்ததும் நினைவுகூரத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bangladesh, Cricket

    அடுத்த செய்தி