SL vs BAN 2nd test: பாதி ஆட்டத்தில் நெஞ்சு வலி - இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதி
SL vs BAN 2nd test: பாதி ஆட்டத்தில் நெஞ்சு வலி - இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதி
நெஞ்சு வலி: குசல் மெண்டிஸ் மருத்துவமனையில் அனுமதி
இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று மிர்பூரில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் திடீரென இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் நெஞ்சு வலியால் தவிக்க அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செக் அப்புக்காக சேர்த்துள்ளனர்.
இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று மிர்பூரில் தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் திடீரென இலங்கை வீரர் குசல் மெண்டிஸ் நெஞ்சு வலியால் தவிக்க அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று செக் அப்புக்காக சேர்த்துள்ளனர்.
27 வயதான குசால் மெண்டிஸ் மைதானத்தை விட்டு வெளியேறும்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தற்போது கூடுதல் தகவல்கள் எதுவும் இல்லை. சற்று முன் அவர் நெஞ்சு வலி காரணமாக உதவிக்குழுவுடன் களத்திலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்.
அவர் ஸ்லிப்பில் பீல்டிங்செய்த போதுமார்பு வலி காரணமாக அவர் அசௌகரியத்தில் காணப்பட்டார்.உடனே அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கள் வெளியாகியுள்ளன. வெறும் தசை வலி என்று அணி நிர்வாகத்திடம் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா தேசிய மைதானத்தில் திங்கள்கிழமை இலங்கைக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் கேப்டன் மொமினுல் ஹக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.வங்கதேசம் இரண்டு மாற்றங்களைச் செய்தது, காயம் அடைந்த நயீம் ஹசன் மற்றும் ஷோரிபுல் இஸ்லாம் ஆகியோருக்குப் பதிலாக மொசாடெக் ஹொசைன் மற்றும் எபடோட் ஹொசைன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் தற்போது 145/5 என்று உள்ளது, முன்னதாக கசுன் ரஜிதா, பெர்னாண்டோ ஆகியோர் முறையே 3 மற்றும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, தொடக்க வீரர்களான மஹ்மதுல் ஹசன் ஜாய் மற்றும் தமீம் இக்பால் டக்கில் ஆட்டமிழக்க, ஷாண்ட்டோ, மோமினுல் ஹக், விரைவில் வெளியேற ஷாகிப் அல் ஹசனும் டக் அவுட் ஆக வங்கதேசம் 6.5 ஓவர்களில் 24/5 என்று சரிந்தது.
சரி இன்னிக்கு நியூசிலாந்தின் 26 ஆல் அவுட்டைத் தாண்டி இந்தியாவின் 36 ஆல் அவுட்டை உடைத்து விடுவார்கள் என்ற ஆவல் ஏற்பட்டது, ஆனால் முஷ்பிகுர் ரஹீம் 54 ரன்களுடனும் லிட்டன் தாஸ் 64 ரன்களுடனும் சதக்கூட்டணி அமைத்து அணியை மீட்டுள்ளனர், இருவரும் ஆடி வருகின்றனர், வங்கதேசம் 137/5.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.