இலங்கை - வங்கதேச அணிகள் இன்று மோதல்!

ICC World Cup 2019 | மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் மழையால் பாதியில் கைவிடப்பட்டதால், தென்ஆப்ரிக்க அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது.

இலங்கை - வங்கதேச அணிகள் இன்று மோதல்!
இலங்கை அணி
  • News18
  • Last Updated: June 11, 2019, 8:23 AM IST
  • Share this:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் இலங்கை அணி வெற்றி பெற்றால் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டம் சவும்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. இதில், தென்ஆப்ரிக்கா அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்கா, 7.3 ஓவர்களில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 29 ரன்கள் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டது.

மேலும் விட்டுவிட்டு மழை பெய்யததால், ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டு 2 அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.


தென்ஆப்ரிக்க-மேற்கிந்திய தீவுகள்


இப்போட்டியில், ஷெல்டன் காட்ரில் (SHELDON COTTRELL) பந்துவீச்சில், கிறிஸ் கெய்ல்-யிடம் கேட்ச் கொடுத்து ஹசிம் ஆம்லா ஆட்டமிழந்தார்.

கிறிஸ் கெய்ல்-க்கு இது ஒருநாள் கிரிக்கெட்டில் 121-வது கேட்சாக அமைந்தது. அத்துடன், அதிக கேட்ச் செய்த மேற்கிந்திய தீவுகள் வீரர்களில் முதலிடம் பிடித்தார். முன்னதாக, கார்ல் கூப்பர் 120 கேட்சுகள் செய்ததே சாதனையாக இருந்து வந்தது.இதற்கிடையில் ஏற்கனவே ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்த தென்ஆப்ரிக்காவுக்கு, 4-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது பின்னடைவாக அமைந்தது. எனவே, எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெறவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினாலும் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகும்.

வங்கதேசம்


இந்நிலையில், பிரிஸ்டோல் (Bristol) மைதானத்தில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேச அணிகள் இன்று மோதவுள்ளன. இப்போட்டி, இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

Also see... ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க கல்லை எட்டிய விராட் கோலி

Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see... 




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading