Home /News /sports /

BAN vs SL- 24/5 -லிருந்து 365 ரன்கள்- 6 பேர் டக் அவுட்- ஆனால்...வங்கதேசத்தின் ‘டான் பிராட்மேன்’ 175 நாட் அவுட்

BAN vs SL- 24/5 -லிருந்து 365 ரன்கள்- 6 பேர் டக் அவுட்- ஆனால்...வங்கதேசத்தின் ‘டான் பிராட்மேன்’ 175 நாட் அவுட்

முஷ்பிகுர் ரஹிம்

முஷ்பிகுர் ரஹிம்

வங்கதேசத்தில் தன்னை அனைவரும் டான் பிராட்மேன் என்று அழைப்பதாக ஒளிவு மறைவின்றி தற்பெருமையுடன் கூறினார் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்பிகுர் ரஹீம், அதற்கு அவரை பலரும் ‘ட்ரால்’ செய்தார்கள், ஆனால் உண்மையில் தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 24 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆகக்குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் நிலைமையில் 175 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாக இருந்து 365 ரன்களுக்குக் கொண்டு சென்றார் முஷ்பிகுர் ரஹீம்.

மேலும் படிக்கவும் ...

    இவரும் லிட்டன் தாஸும் (141) இணைந்து 24/5-லிருந்து 272 ரன்கள் ஜோடியாகச் சேர்த்தனர். இவர்கள் இருவரது ஸ்கோரை கூட்டினாலே 316 ரன்கள் வந்து விடுகிறது, வங்கதேசம் 365 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் என்றால் மற்ற 8 வீரர்களின் பங்களிப்பு வெறும் 49 ரன்களே.

    வங்கதேச அணியில் மொத்தம் 6 வீரர்கள் டக் அவுட். தைஜுல் இஸ்லாம் மட்டுமே 15 ரன்கள் என்று இரட்டை இலக்கம் எட்டினார். இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா, அசிதா பெர்னாண்டோ முறையே 5 மற்றும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றின்ர்.

    முஷிபிகுர் ரஹீமும் லிட்டன் தாஸும் இணைந்து 85 ஓவர்கள் ஆடினர். 218 பந்துகளில் 100 ரன்களை எட்டிய முஷ்பிகுர் ரஹீம் அலையஸ் வங்கதேச டான் பிராட்மேன் கடைசியில் 355 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 175 நாட் அவுட். கடைசி வரை அவரை வீழ்த்தவே முடியவில்லை. இவரது மன உறுதி பயங்கரமானது, நியூசிலாந்தில் இவரும் ஷாகிப் அல் ஹசனும் ஒருமுறை மிகப்பெரிய கூட்டணி அமைத்தனர்.

    இவரை ஒருமுறை சேவாக் களத்தில் குழந்தை என ஸ்லெட்ஜிங் செய்தார், ஆனால் அந்த மேட்சிலேயே வங்கதேசம் தோற்றாலும் முஷ்பிகுர் 75 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தத் தொடரில் முதல் டெஸ்ட்டில் சதம் எடுத்தார்.

    இதுவரை 81 டெஸ்ட் போட்டிகள் ஆடி வங்கதேச கிரிக்கெட் வீரர்களிலேயே முதலில் 5000 ரன்களை டெஸ்ட் போட்டிகளில் கடந்து 5037 ரன்களை எடுத்துள்ளார். 8 சதங்கள் 25 அரைசதங்கள். 1987-ல் பிறந்த முஷ்பிகுர் ரஹீம் தன் 18வது வயதில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் அறிமுகமானார். 17 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை, டெஸ்ட் கிரிக்கெட்டுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதாகக் கூறுகிறார்.

    அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் 219. இந்திய அணி ஒருமுறை 687/6 டிக்ளேர் செய்தனர், அதில் ஒரு பை கூட விடாமல் சாதனைப் பட்டியலில் 4ம் இடத்தில் இருப்பவர். விக்கெட் கீப்பராக ஒரு இன்னிங்ஸில் 219 ரன்கள் எடுத்து சாதனையை தன் வசம் வைத்திருப்பவர். 3 இரட்டைச் சதங்கள் அடித்துள்ளார். இப்படிப்ப்ட்ட சாதனையாளர் தன்னை டான் பிராட்மேன் என்று அழைப்பதை பெருமையுடன் கூறிக்கொண்டால் தவறில்லை.

    2வது டெஸ்ட்டில் இலங்கை தன் முதல் இன்னிங்ஸில் 210/4 என்று உள்ளது. 3ம் நாளான இன்று மழை காரணமாக தடைப்பட்டுள்ள ஆட்டத்தில் மேத்யூஸ் 25 ரன்களுடனும் தனஞ்ஜெய டி சில்வா 30 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 24/5 என்றால் தோற்கக் கூடிய ஆட்டத்தை மாற்றியிருக்கிறார் முஷ்பிகுர் ரஹிம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Sri Lanka vs Bangladesh 2018, Test cricket

    அடுத்த செய்தி