ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

2010 முதல் நியூசிலாந்தில் 400 ரன்களை 4 முறை எடுத்துள்ளது வங்கதேசம்; எங்கப்பா இந்தியா?

2010 முதல் நியூசிலாந்தில் 400 ரன்களை 4 முறை எடுத்துள்ளது வங்கதேசம்; எங்கப்பா இந்தியா?

வெற்றி மகிழ்ச்சியில் வங்கதேசம்

வெற்றி மகிழ்ச்சியில் வங்கதேசம்

நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு மவுண்ட் மாங்குனியில் இன்று முதல் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது, உலக டெஸ்ட் சாம்பியனுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம் இந்த டெஸ்ட்டில் சில சாதனைகளைப் புரிந்துள்ளது, அதில் சிலவற்றைத் தருகிறோம்:

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு மவுண்ட் மாங்குனியில் இன்று முதல் டெஸ்ட் போட்டியில் வென்று வரலாறு படைத்தது, உலக டெஸ்ட் சாம்பியனுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம் இந்த டெஸ்ட்டில் சில சாதனைகளைப் புரிந்துள்ளது, அதில் சிலவற்றைத் தருகிறோம்:

  2010 முதல் நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட அணிகளில் ஆஸ்திரேலியா 4 டெஸ்ட்களில் 4 முறையும் 400க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளது. அடுத்த இடத்தில் பங்களாதேஷ் அணி 6 முறை டெஸ்ட்டில் நியூசிலாந்து மண்ணில் ஆடியதில் 4 முறை 400+ ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து 7 டெஸ்ட் போட்டிகளில் 3 முறையும், தென் ஆப்பிரிக்கா 6 முறை டெஸ்ட் ஆடியதில் 2 முறையும் நியூசிலாந்தில் 400+ ரன்களை குவித்துள்ளது. எங்கப்பா இந்தியா என்று கேட்க வைக்கிறது இந்தப் புள்ளி விவரம்.

  முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 176.2 ஓவர்கள் விளையாடி 458 ரன்கள் எடுத்தது. டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓவர்களை வங்கதேசம் ஆடுவது இது 2ம் முறை. 2013-ல் கால்லேயில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் 196 ஓவர்களை ஆடியது. ஆசியாவுக்கு வெளியே 150 ஓவர்களுக்கும் மேல் ஆடுவது வங்கதேசத்துக்கு இது 2ம் முறை, முதல் முறையும் நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் 2017-ல் 152 ஒவர்கள் ஆடியது வங்கதேசம். அப்போது ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் வெளுத்துக் கட்டினர்.

  கடைசியாக நியூசிலாந்தில் 175 ஓவர்களுக்கும் மேல் பேட் செய்த அணி பாகிஸ்தான், 2009-ல் மெக்லீன் பார்க்கில் 193 ஓவர்கள் பேட் செய்து பாகிஸ்தான் மராத்தான் பேட்டிங்கில் டெஸ்ட்டை ட்ரா செய்தது.

  130- வங்கதேசம் இந்த டெஸ்ட் எடுத்த முதல் இன்னிங்ஸ் முன்னிலை 130 ரன்கள். 2017க்குப் பிறகு உள்நாட்டு டெஸ்ட்டில் நியூசிலாந்து கொடுக்கும் அதிக முன்னிலை.

  வெளிநாட்டு டெஸ்ட்டில் இதற்கு முன்பாக வங்கதேசம் அதிகம் எடுத்த முன்னிலை ஜிம்பாப்வேயில் ஹராரேயில் கடந்த ஆண்டு 192 ரன்கள் முன்னிலை பெற்றது வங்கதேசம்.

  நியூசிலாந்துக்கு எதிராக நியூசி மண்ணில் அரிய டெஸ்ட் வெற்றி.

  8- வங்கதேசத்தின் டாப் 8 பேட்டர்கள் முதல் இன்னிங்சில் 50க்கும் அதிகமான பந்துகளைச் சந்தித்தனர். இது வங்கதேச டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை.

  இதையும் படிங்க: IND vs SA 2nd Test| 100 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் சிறந்த பவுலர்: ஷர்துல் தாகூர் சாதனை

  முதல் இன்னிங்சில் நியூசிலாந்து வேகப்பந்து பவுலர்கள் 890 பந்துகளை வீசினர். அனைத்து 10 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்ற கொடுத்த அதிகபட்ச ரன்களாகும் இது. 2007-க்குப் பிறகு டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் வேகப்பவுலர்கள் அதிக பந்துகளை வீசியதும் இந்த டெஸ்ட் போட்டியில்தான்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Bangladesh, First test cricket match, New Zealand