Home /News /sports /

வெற்றியை நோக்கி புத்தெழுச்சி பெற்ற வங்கதேசம்- தோல்வியின் பிடியில் நியூசிலாந்து- 12 ஆண்டுகளில் இத்தனை ஓவர்களை வீசியதேயில்லை!

வெற்றியை நோக்கி புத்தெழுச்சி பெற்ற வங்கதேசம்- தோல்வியின் பிடியில் நியூசிலாந்து- 12 ஆண்டுகளில் இத்தனை ஓவர்களை வீசியதேயில்லை!

நியூசிலாந்துக்கு எதிராக நியூசி மண்ணில் அரிய டெஸ்ட் வெற்றியை நோக்கி வங்கதேசம்

நியூசிலாந்துக்கு எதிராக நியூசி மண்ணில் அரிய டெஸ்ட் வெற்றியை நோக்கி வங்கதேசம்

நியூசிலாந்தின் மவுண்ட் மாங்குனியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை 328 ரன்களுக்கு மட்டுப்படுத்திய எழுச்சி பெற்ற புதிய வங்கதேச அணி தன் முதல் இன்னிங்சில் 458 ரன்களைக் குவித்தது. பிறகு நியூசிலாந்தை 4ம் நாளான இன்று 147/5 என்று தவிக்க விட்டு வெற்றிக்கதவுகளுக்கு அருகில் உள்ளது புத்தெழுச்சி வங்கதேசம்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
நியூசிலாந்தின் மவுண்ட் மாங்குனியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை 328 ரன்களுக்கு மட்டுப்படுத்திய எழுச்சி பெற்ற புதிய வங்கதேச அணி தன் முதல் இன்னிங்சில் 458 ரன்களைக் குவித்தது. பிறகு நியூசிலாந்தை 4ம் நாளான இன்று 147/5 என்று தவிக்க விட்டு வெற்றிக்கதவுகளுக்கு அருகில் உள்ளது புத்தெழுச்சி வங்கதேசம்.

நியூசிலாந்து அணியில் இந்தியாவை பதம் பார்த்த, இந்தியாவை பதம் பார்க்கும் கைல் ஜேமிசன், நீல் வாக்னர், டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இருக்கின்றனர், நியூசிலாந்து பிட்சில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் வழியும் போது இவர்கள் 458 ரன்களை எடுத்துள்ளனர். இது புத்தெழுச்சி இல்லாமல் வெறென்னவாம்? அதுவும் உறுதியுடன் ஆடிய வங்கதேசத்தைப் பார்க்க முடிந்தது. இந்தியா சமீபமாக டெஸ்ட் போட்டிகளில் 400 ரன்களை எடுத்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதுதான் ரிசல்டாக இருக்கும். அதுவும் அயல்நாட்டில் அதுவும் நியூசிலாந்தில் 458 ரன்களை வங்கதேசம் எடுக்கிறது என்றால் இந்திய பேட்டர்கள் பாடம் கற்றுக்கொள்வதுதான் முறை. 176 ஓவர்களை ஆடி டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது நீளமான இன்னிங்சை வங்கதேசம் ஆடியதோடு, நியூசிலாந்து அணி கடந்த 12 ஆண்டுகளில் இவ்வளவு ஓவர்களை போட்டதில்லை என்கின்றன புள்ளி விவரங்கள்.

இந்திய அணி 2 இன்னிங்ஸ்கள் ஆடும் ஓவர்களை வங்கதேசம் ஒரே இன்னிங்ஸில் ஆடியுள்ளது நியூசிலாந்தில்!!

இதன் மூலம் நியூசிலாந்து 17 ரன்களே முன்னிலை பெற்றுள்ளது, 5 விக்கெட்டுகள் கையில் இருக்கும் வேளையில் கடைசி தொடரில் ஆடிவரும் ராஸ் டெய்லர் 35 ரன்களை எடுத்தும் ரச்சின் ரவீந்திரா 6 ரன்கள் எடுத்தும் களத்தில் இருக்கின்றனர். நாளை 5ம் நாள் விரைவில் நியூசிலாந்தின் 5 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் வீழ்த்தினால் அயல்நாட்டில் ஒரு அரிய டெஸ்ட் வெற்றியை ஆசியாவுக்கு வெளியே முதல் டெஸ்ட் வெற்றியைக் கூட வங்கதேசம் பெறும் வாய்ப்புள்ளது.

இந்த புத்தெழுச்சி பெற்ற வங்கதேச அணிக்கு இடது கை பேட்ஸ்மென் மோமினுல் ஹக் கேப்டனாக இருக்கிறார், இவர் பிரமாதமாக ஆடி 88 ரன்களை எடுத்தார். 21 வயது இளம் தொடக்க வீரர் அறிமுகத்திலேயே நியூசிலாந்தின் பயங்கர பந்து வீச்சுக்கு எதிராக 78 ரன்களை எடுத்தார். நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ என்ற இடது கை பேட்ஸ்மெனுக்கு வயது 23 தான், அவர் 64 ரன்களை எடுத்தார். பழைய வீரர்களில் லிட்டன் தாஸ் 86 ரன்களை எடுத்தது மட்டுமல்ல, இங்கு நம் புஜாராவை ரவுண்ட் த விக்கெட்டில் பவுன்சர் போட்டி கையில், இடுப்பில் மார்பில் கொடுத்த சவுதீயை அதே மாதிரியான பவுலிங்கில் போடப் போட பவுண்டரி விளாசினார் லிட்டன் தாஸ்.

கடைசியில் ஸ்பின்னர் மெஹிதி ஹசன் மிராஸ் 8 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாச 176 ஓவர்களை ஆடி வங்கதேசம் 458 ரன்களைக் குவித்து 130 ரன்கள் முன்னிலை பெற்றது.இதில் 7 அடி உயர கைல் ஜேமிசனைக் கண்டாலே கோலி முதல் பும்ரா வரை விக்கெட்டை வாரி வழங்கும் இந்திய அணியின் நிலைமைக்கு மாறாக வங்கதேசம் நியூசிலாந்திலேயே அவருக்கு ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கொடுத்து அழகு காட்டியது.

இன்று 130 ரன்கள் பின் தங்கிய நிலையில் நியூசிலாந்து தன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய போது முதல் இன்னிங்சில் சதமெடுத்த வேற லெவல் பிளேயர் டெவன் கான்வே 13 ரன்களில் எபாதத் ஹொசைன் வீசிய அருமையான ரவுண்ட் த விக்கெட் 140கிமீ இன்ஸ்விங்கரில் இன்சைடு எட்ஜில் அவுட் ஆகிப் போனார். எபாதத் ஹொசைன் வில் யங் (69), ஹென்றி நிகோல்ஸ் (0), டாம் பிளெண்டல் (0) ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, டாம் லேதமை டஸ்கின் அகமட் வீழ்த்தினார். ராஸ் டெய்லர் கொடுத்த கேட்சை பவுண்டரி அருகே கேட்சை விட்டார் பீல்டர் இதனால் இன்னும் நிற்கிறார் கிரீசில். இல்லையெனில் நியூசிலாந்து தோல்வி இன்னும் துரிதமடைந்திருக்கும். மெஹிதி ஹசன் பிரமாதமாக ஒரு மரபான ஆஃப் ஸ்பின் பவுலிங் வீசி அசத்துகிறார்.

இந்த வங்கதேச அணி எப்படி திடீர் எழுச்சி கண்டது என்பது புரியாத புதிராகவே உள்ளது, டி20 உலகக்கோப்பையில் சொதப்பி வெளியேறிய அணி, உள்நாட்டில் குழிப்பிட்சைப் போட்டு வரும் போகும் அணிகளையெல்லாம் மடித்து பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் அணி வெளிநாடுகளுக்குச் சென்றால் அனைவரும் ஏறி மிதித்து விடுவார்கள், ஆனால் இந்த வங்கதேச அணி ஏறி மிதிக்கக் கூடிய அணியல்ல என்பதை இந்த டெஸ்ட் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
Published by:Muthukumar
First published:

Tags: Bangladesh, First test cricket match, New Zealand

அடுத்த செய்தி