ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Ban | உமேஷ் யாதவ், அஸ்வின் அபாரம்... இந்திய பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம்

Ind vs Ban | உமேஷ் யாதவ், அஸ்வின் அபாரம்... இந்திய பந்துவீச்சில் சுருண்ட வங்கதேசம்

விக்கெட் வீழ்த்திய கொண்டாடத்தில் உமேஷ் யாதவ் மற்று கேப்டன் ராகுல்

விக்கெட் வீழ்த்திய கொண்டாடத்தில் உமேஷ் யாதவ் மற்று கேப்டன் ராகுல்

Ind vs Ban | வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சினால் வங்கதேச அணி 227 ரன்களுக்கு முதல் இன்னிங்சிஸ் ஆட்டமிழந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.  இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 188 ரன் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று காலை டாக்காவில் தொடங்கியது.

இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதில் ஜெய்தேவ் உனத்கட் இடம் பெற்றார். வங்காளதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. டாஸ் ஜெயித்த வங்காளதேச அணி கேப்டன் ஷகீப்-அல்-ஹசன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய வங்காளதேசத்தின் தொடக்க வீரர்களாக ஜாகீர் ஹசன், நஜ்முல் ஜோடி களமிறமங்கினர். 15-வது ஓவரில் வங்காள தேசத்தின் முதல் விக்கெடை ஜெய்தேவ் உனத்கட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க: கேப்டனாகிறார் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா? வருங்கால இந்திய அணியை உருவாக்க பிசிசிஐ அதிரடி திட்டம்?

அடுத்து வந்த கேப்டன் ஷகீப்-அல்-ஹசன், 16 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், மொமினுல் ஹக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. முஷ்பிகுர் ரகிம் 26 ரன்கள், லித்தன் தாஸ் 25 ரன்கள், மெகிடி ஹசன் 15 ரன்களில் ஆட்டமிழ்ந்தனர், அந்த அணியில் அதிகப்பட்சமாக மொமினுல் ஹக் 84 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

இதனால் வங்கதேச அணி 227 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ், அஷ்வின் தலா 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினர். ஜெய்தேவ் உனத்கட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள் சேர்த்துள்ளது.

First published:

Tags: India vs Bangladesh