வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சட்டோக்ரம் நகரில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்களை எடுத்தது. அடுத்து பேட் செய்த வங்கதேசம், இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 254 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக கேஎல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் களத்தில் இறங்கினர். 62 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்த ராகுல் கலீல் அகமது பந்து வீச்சில் தைஜுல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதைடுத்து ஜோடி சேர்ந்த புஜாரா –கில் இணை வங்க தேச பந்து வீச்சை சிரமமே இல்லாமல் எதிர்கொண்டு விளையாடியது. ஒருநாள் போட்டியைப் போல் விளையாடிய சுப்மன் கில் டெஸ்டில் முதல் சதத்தை பதிவு செய்தார். கில் 152 பந்துகளில் 3 சிக்சர் 10 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்திருந்தபோது மெஹிதி ஹசன் பந்துவீச்சில் மஹ்முதல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, புஜாரா தனது சற்று அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினர்.
இறுதியில் இந்திய அணி 61.4 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணி 513 ரன்களை வங்கதேச அணிக்கு இலக்காக நிர்ணயத்துள்ளது. இந்திய அணி அதிகபட்சமாக கில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய புஜாரா 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இன்றைக்கு 3ஆம் நாள் ஆட்டமே நடந்து வருவதால் முதல்டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ind vs Ban