முகப்பு /செய்தி /விளையாட்டு / கோலி, ராகுல் சொதப்பல்: மோசமாக இருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்திய புஜாரா- ஐயர் ஜோடி

கோலி, ராகுல் சொதப்பல்: மோசமாக இருந்த இந்திய அணியை தூக்கி நிறுத்திய புஜாரா- ஐயர் ஜோடி

சரிவில் இருந்த இந்திய அணியை மீட்ட புஜாரா -ஐயர் ஜோடி

சரிவில் இருந்த இந்திய அணியை மீட்ட புஜாரா -ஐயர் ஜோடி

IND vs BAN Test Series | வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்தில் சுற்றுபயணம் செய்துள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேன முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். முதல் மூன்று விக்கெட்டை இழந்து இந்திய அணி திணறி வந்த நிலையில் அடுத்து வந்த புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டனர். பந்த் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். ரிஷப் பந்த் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி... பிரான்ஸ் - மொராக்கோ பலப்பரீட்சை... பலம், பலவீனம் என்ன?

இதனையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்- புஜாரா ஜோடி நிலைத்து நின்று இந்தியாவை வலுப்படுத்தினர். வழக்கமான தனது தடுப்பாட்டத்தை விளையாடிய வங்கதேச பந்துவீச்சாளர்களை திணறவைத்தார். சிறப்பாக விளையாடி சதம் அடிப்பார் என்று நினைத்திருந்த புஜாரா 203 பந்துகளில் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயல் ஐயர் 82 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

First published:

Tags: Cheteshwar Pujara, India vs Bangladesh, Shreyas Iyer