ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Ban | சொதப்பிய டாப் ஆர்டர் பேட்டிங்; தனி ஆளாக போராடிய கே.எல.ராகுல்.. வங்கதேச அணிக்கு எளிய இலக்கு

Ind vs Ban | சொதப்பிய டாப் ஆர்டர் பேட்டிங்; தனி ஆளாக போராடிய கே.எல.ராகுல்.. வங்கதேச அணிக்கு எளிய இலக்கு

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 186 ரன்களுக்கு சுருண்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, Indiadhakadhakadhakadhakadhaka

வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையே மிர்புரில் இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி உள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

இந்திய அணியில் அறிமுக வீரராக குல்தீப் சான் களமிறங்கியுள்ளார். மேலும் காயம் காரணமாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடரில் இருந்து விலகியுள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் சோபிக்கவில்லை. தவான் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நல்ல பார்மீல் இருந்த விராட் கோலி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: கால்பந்து உலகக்கோப்பை: அமெரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து.. காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

சற்று நிதனமாக விளையாடிய கேப்டன் ரோகித் 27 ரன்களுக்கும் ஸ்ரேஸ் ஜயர் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையை கட்டினர். இந்திய அணி 92 ரன்களுக்கு முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து திணறியது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டெடுத்து அரைசதம் அடித்தார். கடைசி வரை போராடிய அவர் 73 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 186 ரன்களை குவித்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாகிப் அல் ஹாசன் 5 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

First published:

Tags: India captain Rohit Sharma, India vs Bangladesh, Kl rahul