வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதத்தை தவற விட்டார். வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி முதன் இன்னிங்ஸில் வங்கதேசத்தை விட முன்னிலை பெற்றுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதிகபட்சமாக அந்த அணியின் மோமினுல் 84 ரன்கள் சேர்த்தார். மற்றவர்களில் முஷ்பிகுர் ரகிம் 26, லிட்டன் தாஸ் 25 ஷாண்டோ 24 ரன்கள் எடுத்தனர்.
73.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணி, 94 ரன்கள் எடுப்பதற்குள்ளாக 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கேப்டன் கே.எல். ராகுல் 10 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் வெளியேறினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, கோலி ஆகியோர் தலா 24 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன்பின்னர் சேர்ந்த ரிஷப் பண்ட் – ஷ்ரேயாஸ் அய்யர் இணை ஒருநாள் போட்டி போன்று வங்கதேச பந்து வீச்சை எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.
சீரான இடைவெளியிலும் சிக்சரும் ஃபோரும் பறந்ததால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 105 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் 5 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 93 ரன்கள் எடுத்திருந்தபோது, மெகிதி ஹசன் பந்து வீச்சில் நூருல் ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
IPL 2023 Auction : 3 ஆல்ரவுண்டர்களை குறி வைக்கும் ஐபிஎல் அணிகள்…
5ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் – ஷ்ரேயாஸ் இணை 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்துள்ளது. தற்போது முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று இந்திய அணி விளையாடி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Rishabh pant