கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா இன்று முறியடித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தலைநகர் டாக்காவில் நேற்று தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் பேட் செய்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ராகுல் 10 ரன்களிலும், சுப்மன் கில் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா 24 ரன்களில் வெளியேறினர். முதல் டெஸ்டுடன் ஒப்பிடும்போது இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.
ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் எடுக்க நினைக்கும் வீரர்களின் முழு விவரம் இதோ
இந்த போட்டியில், 24 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை புஜாரா ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையையும் அவர் முறியடித்திருக்கிறார். பிராட்மேன் டெஸ்டில் 6996 ரன்களை எடுத்திருக்கிறார்.
முன்னதாக சச்சின், டிராவிட், கவாஸ்கர், விவிஎஸ் லக்ஸ்மன், விராட் கோலி, கங்குலி, சேவாக் ஆகியோர் டெஸ்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். கடந்த டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் புஜாரா 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 329 இன்னிங்ஸில் விளையாடி 15,921 ரன்களை எடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.