முகம் சுழிக்க வைத்த வெற்றிக் கொண்டாட்டம்! குப்பைகளை அள்ளி மனதை வென்ற வங்கதேச வீரர்கள்

முகம் சுழிக்க வைத்த வெற்றிக் கொண்டாட்டம்! குப்பைகளை அள்ளி மனதை வென்ற வங்கதேச வீரர்கள்
வங்கதேச வீரர்கள்
  • Share this:
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையைத் தட்டிச் சென்ற வங்கதேச வீரர்கள், கிரிக்கெட் மைதானத்திலிருந்து குப்பைகளை அகற்றியதற்கு உலக பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. முதன்முறையாக உலகக் கோப்பையை வென்ற வங்க தேசம் வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்உட்சமாக இந்திய வீரர்களை கடும் வார்த்தைகளால் கேலி செய்தனர்.

அதனால், இந்திய வீரர்களும் வங்கதேச வீரர்களுக்கும் இடையில் மோதல் உருவானது. சண்டை பெரிதாகவிருந்த சூழலில், அதிகாரிகள் வந்து வீரர்களை இழுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் பெரும் முகச் சுழிப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு, வங்கதேச வீரர்கள் மைதானத்தில் சிதறிக் கிடந்த குப்பைகளை அள்ளி, சுத்தம் செய்வதற்கு உதவினார்கள்.
அந்த வீடியோ, ஐ.சி.சியின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கமான உலகக் கோப்பை கிரிக்கெட் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. வங்க தேச வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

Also see:


 
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading