ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்தில் சிக்கிய வங்கதேசம் 106 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் இஸ்லாம், இம்ருல் கயஸ் களமிறங்கினர். இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். வங்கதேச அணி 15 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் 4 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இதன் மூலம் பிங்க் பந்தில் விக்கெட் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றுள்ளார்.
இம்ருல் கயஸை அடுத்து களமிறங்கிய கேப்டன் மோமினுல் ஹக், முஹமது மிதுன், முஸ்தஃபிர் ரஹிம் மூவரும் டக்-அவுட்டாகி வெளியேறினர். பொறுமையாக விளையாடிய இஸ்லாம் 29 ரன்னில் அவுட்டாகினர்.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் அந்த அணி ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. இறுதியாக வங்கதேச அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய பந்துவீச்சாளர்களில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், , ஷமி 2 விக்கெட்டைகளையும் வீழ்த்தினர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.