எல்லா நாட்டிலும் இந்திய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு உண்டு, ஆனால் இங்கு மட்டும் இல்லை - ரோஹித் சர்மா

Rohit Sharma | உள்ளூர் அணிகளுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு இந்திய அணிக்கும் கிடைக்கும்.

எல்லா நாட்டிலும் இந்திய அணிக்கு ரசிகர்கள் ஆதரவு  உண்டு, ஆனால் இங்கு மட்டும் இல்லை - ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா
  • Share this:
இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய அணிக்கு வெகுவாக ரசிகர்கள் உள்ளதாக ரோஹித் சர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளில் வெளிநாடுகளில் வழக்கமாக ரசிகர்களின் ஆதரவு குறைவாகவே இருக்கும். ஆனால் இந்திய அணி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்கும். இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் இந்திய அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

உள்ளூர் அணிகளுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு இந்திய அணிக்கும் கிடைக்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, அரபு நாடுகளில் இந்திய அணிக்கு வெகுவாக ரசிகர்களின் உள்ளதாக இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா பெருமிதம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக வங்கதேச வீரர் தமீம் இக்பாலுடன் இன்ஸ்டாகிராம் நேரலையின் போது ரோஹித் சர்மா, “இந்தியாவிலும் வங்கதேசத்திலும் தீவரமான ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணி எந்த நாட்டிற்கு சென்றாலும் ரசிகர்களின் ஆதரவு இருக்கும். ஆனால் வங்கதேசத்தில் அப்படி இருக்காது.

வங்கதேசத்தில் மட்டும் தான் இந்திய அணிக்கு ஆதரவு எங்களுக்கு கிடைப்பதில்லை. தற்போது வங்கதேச அணி வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடுகிறார்கள். இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக் கோப்யைில் அதை பார்க்க முடிந்தது“ என்றார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading