நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நல்வாய்ப்பாக உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று பத்திரமாக தாயகம் திரும்பினர்.
வங்கதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தது. நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற இருந்தது.
இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி அந்நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் மர்ம நபர் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த நேரத்தில் மசூதியில் வங்கதேச கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் மதிய நேர வழிபாட்டுக்காக சென்றனர். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட உடனே மசூதி வளாகத்தில் இருந்து மரண பயத்தில் ஓடினர்.
வங்கதேச வீரர்கள், நல்வாய்ப்பாக எந்தவித காயமும் இன்றி பத்திரமாக உயிர்தப்பி தங்கியிருந்த விடுதிக்குச் சென்றனர். பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வங்கதேசத் தொடர் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர்கள், இன்று தலைநகர் டாக்கா வந்து சேர்ந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து மகமதுல்லா கூறுகையில், “ஒரே ஒரு விஷயம் தான் என்னால் சொல்ல முடியும். உண்மையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களின் வேண்டுதல் தான் நாங்கள் இன்று உயிரோடு நாடு திரும்பியுள்ளோம். எங்களின் மனநிலை எப்படி இருக்கிறது வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பத்தில் இருந்து வங்கதேச வீரர்கள் உயிர்தப்பினாலும், அவர்களது மனதில் இன்னமும் பதற்றம் அகலவில்லை என்பது தெரிகிறது.
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bangladesh, Mosque