ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வங்கதேச அணியின் பயிற்சியாளர் ராஜினாமா… இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்வியால் முடிவு

வங்கதேச அணியின் பயிற்சியாளர் ராஜினாமா… இந்தியாவுக்கு எதிரான தொடர் தோல்வியால் முடிவு

ரஸல் டோமிங்கோ

ரஸல் டோமிங்கோ

டோமிங்கோவின் பயிற்சியின் கீழ் வங்கதேச அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேச கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரஸல் டோமிங்கோ ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில் டோமிங்கோ இந்த முடிவை எடுத்துள்ளார். வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது.

டெஸ்டில் அடைந்த படு தோல்வி காரணமாக வங்கதேச அணி மீது நெருக்கடிகள் அதிகரித்தன. குறிப்பாக அந்த அணியின் பயிற்சியாளர் ரஸல் டோமிங்கோ மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் டோமிங்கோ தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜலால் யூனுஸ் உறுதி செய்துள்ளார். டோமிங்கோவின் ராஜினாமா உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த திங்களன்று டோமிங்கோவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தனது பொறுப்பை டோமிங்கோ ராஜினாமாசெய்துள்ளார். ஏற்கனவே டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டோமிங்கோ விலகியிருந்தார். இதையடுத்து அந்த பொறுப்பு ஸ்ரீதரன் ஸ்ரீராமுக்கு அளிக்கப்பட்டிருந்தது. அவரது பயிற்சியின் கீழ் வங்கதேச அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக உள்ளூரில் நடந்த டி20 கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றிருந்தது.

மேலும் டோமிங்கோவின் பயிற்சியின் கீழ் வங்கதேச அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச அணி அடுத்ததாக மார்ச் 1ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அதற்கு முன்பாக பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இந்தியா – பாக். டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுமா? போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்த மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்

குறிப்பாக இலங்கை வீரர் சந்திகா ஹதுருசிங்கே நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. 2 பயிற்சியாளர் முறையை வங்கதேச அணி கடைபிடித்து வருகிறது. அதாவது டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு பயிற்சியாளரும், டி20 போட்டிகளுக்காக தனி பயிற்சியாளரும் வங்கதேச அணியில் இருப்பார்கள்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வுக்குழு… ஜனவரி மாதம் நியமிக்கப்படும் என தகவல்

இந்த 2 பயிற்சியாளர் முறை நீடிக்கும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான புதிய பயிற்சியாளர் விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Cricket