முகப்பு /செய்தி /விளையாட்டு / 2ஆவது டி20-யிலும் இங்கிலாந்து தோல்வி… தொடரை வென்றது வங்கதேச அணி

2ஆவது டி20-யிலும் இங்கிலாந்து தோல்வி… தொடரை வென்றது வங்கதேச அணி

வெற்றியைக் கொண்டாடும் வங்கதேச அணி வீரர்கள்.

வெற்றியைக் கொண்டாடும் வங்கதேச அணி வீரர்கள்.

வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ். ரோனி டலுக்தார் ஆகியோர் தலா 9 ரன்னில் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேச அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இதைடுத்து நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸில் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பிலிம் சால்ட் – டேவிட் மாலன் களம் இறங்கினர். பிலிப் 25 ரன்னிலும், மாலன் 5 ரன்னிலும் வெளியேற அடுத்து வந்த மொயின் அலி 15 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். டக்கெட் 28 ரன்னும், சாம் கரன் 12 ரன்னும் சேர்க்க இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது.

118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் விளையாடத் தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் 9 ரன்னிலும், ரோனி டலுக்தார் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். தவ்ஹீத் ஹிரோடி, மெஹிதி ஹசனுடன் அவர் அமைத்த பார்ட்னர்ஷிப்பால் அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. நஜ்முல் ஹொசைன் 46 ரன்னும், ஹிரோடி 17 ரன்னும், மெஹிதி ஹசன் 20 ரன்னும் எடுக்க 18.5 ஓவரில் வெற்றி இலக்கை வங்கதேச அணி அடைந்து தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

First published:

Tags: Cricket