• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பிட்ச்சில் நடனமாடி பந்துவீச்சாளரை கடுப்பேற்றிய வங்கதேச பேட்ஸ்மேன்.. டெஸ்ட் மேட்ச்சில் சுவாரஸ்யம்..!

பிட்ச்சில் நடனமாடி பந்துவீச்சாளரை கடுப்பேற்றிய வங்கதேச பேட்ஸ்மேன்.. டெஸ்ட் மேட்ச்சில் சுவாரஸ்யம்..!

வீரர்களுக்கிடையே களத்தில் மோதல்

வீரர்களுக்கிடையே களத்தில் மோதல்

வங்கதேச பேட்ஸ்மேன் டஸ்கின் அகமதுவின் அருகே சென்ற Blessing Muzarabani, அவருடன் மோதும் வகையில் நெருங்கிச் சென்றார்.

  • Share this:
கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட்டை கடந்தும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. கால்பந்து, ரக்பி, கபடி போன்ற விளையாட்டுக்களில் மோதல் சம்பவங்கள் சகஜம். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக இல்லையென்றாலும் இரு அணி வீரர்களுக்கிடையிலான மோதல் சம்பவங்கள் அரிதாக நடைபெறத்தான் செய்கின்றன.

அந்த வகையில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியின் போது இரு அணி வீரர்களுக்கிடையில் ஒரு சுவாரஸ்ய மோதல் வெடித்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஹிட் அடித்திருக்கிறது.

ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி அந்நாட்டுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி ஹராரே மைதானத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.



இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதல் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களை காலி செய்த ஜிம்பாம்வே பந்துவீச்சாளர்களால் டெயில் எண்டரை காலி செய்ய முடியவில்லை. வங்கதேச டி20 அணியின் கேப்டனான மஹ்முதுல்லா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, டெயில் எண்டரான தஸ்கின் அகமது அவருக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் விரக்தியில் இருந்த ஜிம்பாப்வே பவுலர்கள் தஸ்கினுடன் அவ்வப்போது உரசலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் போட்டியின் இரண்டாம் நாளின் இரண்டாவது ஓவரில், ஜிம்பாப்வேக்கு குடைச்சல் கொடுத்து வந்த டெயில் எண்டர் டஸ்கின் அகமது, ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் Blessing Muzarabani வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அழகாக தவிர்த்துவிட்டு திடீரென டான்ஸ் ஆடினார். ஏற்கனவே விரக்தியில் இருந்து வந்த ஜிம்பாப்வே பந்துவீச்சாளர் Muzarabani-யை, டஸ்கினின் நடனம் மேலும் ஆத்திரமூட்டியது.

Also Read:  குடும்ப தலைவிகளுக்கு மாதம் ₹1000 வாக்குறுதியால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு!

வங்கதேச பேட்ஸ்மேன் டஸ்கின் அகமதுவின் அருகே சென்ற Blessing Muzarabani, அவருடன் மோதும் வகையில் நெருங்கிச் சென்றார். இருவரும் உரசும் அளவுக்கு நெருங்கினர். இருவருக்கும் இடையே வார்த்தை மோதலும் ஏற்பட்டது. பின்னர் டஸ்கின் அவரிடம் விலகிச் செல்லுமாறு கூறினார். இவ்விருவருக்குமான இந்த திடீர் மோதல் பிற வீரர்களை பரபரப்பாக்கியது.

இந்த மோதல் தொடர்பாக பின்னர் பேசிய தஸ்கின், “ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் என்னை அவுட் செய்வதற்காக பவுன்சர் தாக்குதலில் ஈடுபட்டனர். நான் அவர்களை திறம்பட கையாண்டேன் என நினைக்கிறேன். சிலர் என்னை வசைபாடவும் செய்தனர். தொடர்ந்து என்னை திட்டியபோது பந்தை கொண்டு ஏதாவது முயற்சிக்குமாறு கூறினேன்” என்றார்.

இந்த மோதலுக்கு பிறகும் கூட வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கும், ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களுக்குமிடையே உரசல் நீடித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதியாக வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 468 ரன்களை குவித்தது. ஜிம்பாப்வேக்கு குடைச்சல் கொடுத்த டஸ்கின் அகமது சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். 134 பந்துகளை எதிர்கொண்ட டஸ்கின் 11 பவுண்டரிகளுடன் 75 ரன்களை சேகரித்தார். தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3வது நாள் முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்து 237 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: