முகப்பு /செய்தி /விளையாட்டு / ரசிகர்களை தொப்பியால் வெளுத்தெடுத்த கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ

ரசிகர்களை தொப்பியால் வெளுத்தெடுத்த கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ

ரசிகர்களை தொப்பியால் தாக்கும் ஷகிப் அல் ஹசன்

ரசிகர்களை தொப்பியால் தாக்கும் ஷகிப் அல் ஹசன்

நிகழ்ச்சி ஒன்றின்போது நூற்றுககணக்கான ரசிகர்களை ஷகிபை சூழ்ந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கதேச அணியின் நட்சத்திர ஆட்டக் காரர், தனது தொப்பியால் ரசிகர்களை தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ரோல் மாடலாக இருக்க வேண்டிய கிரிக்கெட் வீரர் இப்படி கோபத்தில் தாக்கலாமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பில் இருந்தவர் ஷகிப் அல் ஹசன். ஆல் ரவுண்டரான இவர் தனது அணிக்கு பல முறை வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளிலும் ஷகிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளார். இருப்பினும் அவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வீடியோக்களில் சிக்கி விடுவது உண்டு. எளிதில் உணர்ச்சி வசப்படும் அவர் கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோக்கள் கடந்த காலங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றின்போது நூற்றுககணக்கான ரசிகர்களை ஷகிபை சூழ்ந்து கொண்டனர்.

அப்போது நெருக்கடியில் சிக்கித் தவித்த அவர், பொறுமையிழந்தார். இதையடுத்து தனது தொப்பியை வைத்து ரசிகர்களை அடி வெளுத்தெடுத்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில், வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த போட்டி நாளை டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

First published:

Tags: Cricket