கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி

கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஜோடி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய கோலி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி! முதல் வெற்றியைப் பதிவு செய்த பெங்களூரு அணி
கோலி
  • News18
  • Last Updated: April 14, 2019, 11:57 AM IST
  • Share this:
பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பெங்களூரு அணி இந்த ஐ.பி.எல் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோதும் லீக் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வ் படேல், விராட் கோலி களமிறங்கினர். பிரித்வி படேல் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி, ஏபிடி வில்லியர்ஸ் ஜோடி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய கோலி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


அப்போ சுரேஷ் ரெய்னா, இப்போ கிறிஸ் கெயில்

மறுபுறம் தொடர்ச்சியாக, ஏபிடி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார். இறுதியில் பெங்களூரு அணி 19.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Also see:


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்