Home /News /sports /

BANvAFG | வங்கதேச அணி 262 ரன்கள் குவிப்பு!

BANvAFG | வங்கதேச அணி 262 ரன்கள் குவிப்பு!

BAN

BAN

ICC World Cup 2019 | Bangladesh vs Afghanistan | நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஷகிப் அல்ஹசன் முதலிடத்துக்கு முன்னேறினார்.

  • News18
  • Last Updated :
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நிதானமாக ஆடிய வங்கதேச அணி 262 ரன்கள் சேர்த்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 31-வது லீக் போட்டியில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சவுதாம்டனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் நைப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக லிடன் தாஸ் மற்றும் தமிம் களமிறங்கினர். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் தொடக்க இணை நிதானமாக விளையாடியது. முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் லிடன் தாஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்பாக விளையாடிய தமிமூம் 36 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

அடுத்து இணைந்த ஷகிப் அல்ஹசன் - ரஹீம் ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. பொறுப்பாக ஆடிய ஷகிப் அல்ஹசன் அரைசதம் அடித்த கையோடு நடையை கட்டினார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் இவர் முதலிடத்துக்கு முன்னேறினார். முஸ்தஃபிகுர் ரஹீமும் தனது பங்கிற்கு அரைசதம் 83 ரன்களில் ஆட்டமிழந்தார்.

வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

Also Watch

;
Published by:Vijay R
First published:

Tags: ICC Cricket World Cup 2019, ICC world cup

அடுத்த செய்தி