வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று, தொடரை வசப்படுத்தியது. இதையடுத்து, மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவின் சார்பில் காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தீபக் சாகர், குல்தீப் சென் ஆகியோர் விலகினர். இதனால், இன்றைய போட்டியில் லோகேஷ் ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்கி உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. வீரர்கள் காயத்துடன் பங்கேற்று விளையாடுவதால் போட்டிகளில் வெற்றி அடைவதில் சிக்கல் உள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மாக பகீரங்கமாக பிசிசிஐ சாடியிருந்தார்.
இதனிடையே காயம் காரணமாக விலகி உள்ள ரோஹித் சர்மாவிற்கு பதில் இஷான் கிஷான் அணியில் இடம்பிடித்துள்ளார். அதேப்போன்று காயம் காரணமாக விலகி உள்ள வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.
கடைசிப் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றிக்காக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், வங்கதேச அணி மீண்டும் அதிர்ச்சியளிக்க காத்திருக்கிறது. எனவே, சம்பிரதாய போட்டி என்பதையும் கடந்து இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி : ஷிகார் தவான், இஷான் கிஷான், விராட் கோலி, ஸ்ரோயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் படேல், சர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ind vs Ban