WIvBAN | வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு!

ICC World Cup 2019 | WestIndies vs Bangaladesh | உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்த இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள் 3 முறை வென்றுள்ளது.

WIvBAN | வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு!
WIvBAN
  • News18
  • Last Updated: June 17, 2019, 2:43 PM IST
  • Share this:
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின், டான்டன் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும், வங்ததேசமும் மோதுகின்றன.

இந்தத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வங்கதேச அணியும் இதுவரை நான்கு போட்டிகளில் தலா மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளன. எனினும், ரன்ரேட் அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆறாம் இடத்திலும் வங்கதேச அணி எட்டாவது இடத்திலும் உள்ளன.





உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்த இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் மேற்கிந்தியத் தீவுகள் 3 முறை வென்றுள்ளது. ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.

மேற்கிந்தியத் தீவுகளை அச்சுறுத்தும் சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதால் வங்கதேச அணி நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது. எனினும் ஆல்ரவுண்டர்கள் நிறைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்கதேச அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

Also Watch

First published: June 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்