பந்தை நீங்களே வச்சுக்கோங்க…இல்லேனா நான் ஓய்வு என கூறுவார்கள்? தோனி கிண்டல்!

பந்தை நீங்களே வச்சுக்கோங்க…இல்லேனா நான் ஓய்வு என கூறுவார்கள்? தோனி கிண்டல்!

பந்தை பேட்டிங் பயிற்சியாளரிடம் கொடுத்த தோனி. (Video Grab)

#MSDhoni jokes with #SanjayBangar after 3rd ODI | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றிபெற்றதும் பந்தை எடுத்து வந்த தோனி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரிடம் பந்தை கொடுத்து கிண்டலாகப் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

  இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, தோனி 87 ரன்களுடனும், கேதார் ஜாதவ் 61 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

  Dhoni, தோனி
  7-வது முறையாக ஒரு நாள் தொடரில் தொடர் நாயகன் விருதை தோனி பெற்றார். (BCCI)


  போட்டி முடிந்த பிறகு, மைதானத்திலிருந்து வீரர்களுக்கு கைகுலுக்கி வெளியேறும்போது, தோனி தனது கையில் பந்தை எடுத்து வந்தார். ஆனால், நீண்ட நேரம் பந்தை தனது கையில் அவர் வைத்திருக்கவில்லை. எதிரே வந்த இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரிடம் பந்தை கொடுத்தார்.

  Dhoni, தோனி
  2019-ம் ஆண்டில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோனி அரை சதம் அடித்தார். (BCCI)


  அப்போது, “இந்தப் பந்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் நான் ஓய்வுபெற போகிறேன் என்று கூறுவார்கள்” என கிண்டலாகப் பேசினார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  இதற்கு முன்பு, சில போட்டிகளில் வெற்றிக்குப் பின்னர் தோனி பந்தை எடுத்து சென்றபோது, அவர் ஓய்வு பெற இருப்பதாக வதந்தி கிளம்பியது. இதுபோன்ற யூகங்களைத் தவிர்பதற்காக தோனி அவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.

  ஆஸ்திரேலிய மண்ணில் தோனி செய்த சாதனை!

  Also Watch...

  Published by:Murugesan L
  First published: