கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை சர்வதேச வீரராக தரம் உயர்த்த online talent hunt எனும் புதிய முயற்சியை தொடங்கி இருக்கிறார் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்.
இது தொடர்பாக சென்னை சேப்பாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பத்ரிநாத், ‘தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இதை செய்கிறோம். முதல் முறை இது ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
விளையாடுவதற்கு திறமை மட்டும் போதாது உடல் மற்றும் மன ரீதியான வலிமை தேவை என்று கூறினார். கடந்த 1 வருடமாக எங்கள் கடின உழைப்பை போட்டு இதனை உருவாக்கி இருக்கிறோம். இதற்கு எங்கள் பின்னால் ஒரு வலுவான குழு இருக்கிறது என்று அவர் கூறினார்.
கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் நீங்கள் விளையாடும் video எடுத்து குறிப்பிட்ட எங்கள் web page ல் upload செய்ய வேண்டும். மேலும் Online talent hunt என்ற பக்கத்தில் உங்களுக்கான ஒரு profile உருவாக்க வேண்டும் என கூறினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் எங்களுக்கு உறுதுணையாக உள்ளது என்று கூறிய அவர், இதற்கான வயது வரம்பு 10ல் இருந்து 22 என அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நமது செய்தியாளர் சடையாண்டியிடம் பேசிய பத்ரிநாத், ‘தெருவில் கிரிக்கெட் விளையாடும் வீரரை சர்வதேச வீரராக உருவாக்கும் புதிய முயற்சிதான் இது என்றும் திறமையான வீரர்கள் வீடியோக்களை அனுப்பும் போது அதை நானும் எங்களது வல்லுநர்கள் குழுவும் இணைந்து சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் கிரிக்கெட் உபகரணங்கள் என அடிப்படை தேவை முதல் சர்வதேச வீரராக ஐ.பி.எல் போன்ற அணிகளில் விளையாடுவது என அனைத்தும் வழிநடத்தப்படும் என தெரிவித்தார்.
நடப்பு ஐ.பி.எல் தொடர்பாக பேசிய அவர், ‘புதிய ஃபார்மட் லீக் போட்டிகள் சுவாரஷ்யமானதாக இருக்கும் எனவும் 10 அணிகள் விளையாடுவதால் நிறைய போட்டிகள் நடைபெறுவதாக இருக்கும் எனவும் திறமைகள் பிரிந்திருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிவித்தார்.
சி.எஸ்.கே அணியை பொருத்தவரை வலுவான அணியாக இருப்பதாகவும் தோனி ஆர்மி எதற்கும் தயாராக உள்ளதாக தெரிவித்தார். குரூப் லீக் போட்டிகள் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளில் சி.எஸ்.கே. கட்டாயம் இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.