ஆஸி. கேப்டன் டிம் பெய்னின் குழந்தை உடன் ரிஷப் பண்ட். (Twitter)
‘Babysitter’ Rishabh Pant meets Tim Paine's wife | மெல்போர்ன் டெஸ்டில், ‘எனது குழந்தைப் பார்த்துகொள்கிறாயா?’ என ரிஷப் பண்டை, டிம் பெய்ன் கிண்டல் செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்னின் சவாலை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் செய்துகாட்டினார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.
மெல்போர்னில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான டிம் பெய்னும், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தனர்.
ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும்போது, “தோனி வந்ததும் ஒருநாள் அணியில் இருந்து உன்னை நீக்கிவிட்டார்கள். பிக் பாஷ் லீக்கில் விளையாடும் அணியில் சேர்த்துவிடவா?, எனது குழந்தைப் பார்த்துகொள்கிறாயா நானும் எனது மனைவியும் படம் பார்க்க செல்ல வேண்டும்” என டிம் பெய்ன் கிண்டல் செய்தார்.
அந்த புகைப்படத்தில் டிம் பெய்னின் மனைவி ஒரு குழந்தையை வைத்துள்ளார். இன்னொரு குழந்தையை ரிஷப் பண்ட் தூக்கி வைத்துள்ளார். இதன்மூலம், தான் சிறந்த குழந்தை பராமரிப்பாளர் என்பதை ரிஷப் பண்ட் நிரூபித்துள்ளார்.
Also Watch...
Published by:Murugesan L
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.