தன் பார்முக்காக தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விராட் கோலி பல கேள்விகளை தலையில் சுமந்து விடைதேடி விக்ரமாதித்தன் கதையில் வருவது போல் விடை தெரியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு எல்லையைத் தாண்டிய பாகிஸ்தான் அணியின் கேப்டனிடமிருந்து ஆதரவும் அன்பும் கிடைத்துள்ளது, பாபர் அசாமின் விராட் கோலிக்கான ஆறுதல் மெசேஜ் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
இதோ வைரலான பாபர் அசாமின் விராட் கோலி மெசேஜ்:
This too shall pass. Stay strong. #ViratKohli pic.twitter.com/ozr7BFFgXt
— Babar Azam (@babarazam258) July 14, 2022
விராட் கோலியும் பல விதங்களில் ஆடிப்பார்க்கிறார், ஆனாலும் பார்ம் மீட்க முடியவில்லை, பயங்கரமாக திணறுகிறார், இல்லை அவுட் ஆகி விடுகிறார், தேவையில்லாமல் அவரிடமிருந்து கேப்டன்சியை பிடுங்கியதிலிருந்தே அவரது தன்னம்பிக்கையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது, இனி அதை மீட்க முடியும் என்று தோன்றவில்லை.
டெக்னிக்கலாக அவரது பேட்டிங்கில் தவறு உள்ளது, ஆனால் அதை திருத்துவது மட்டுமே பார்முக்கு வர போதாது நேற்று கூட லார்ட்ஸ் தோல்வியில் அவர் 3 அட்டகாச பவுண்டரிகளை விளாசினார், ஆனால் அவர் பேட்டின் எட்ஜ் விடாமல் அவரை தொண தொணத்து பந்தை நோக்கிச் செல்கிறது, எட்ஜ் ஆகி அவுட் ஆகிறார், நேற்றும அவுட் ஆனார். வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார் விராட் கோலி.
கோலி உச்சத்தில் இருந்த போது அப்போதுதான் வளர்ந்து வந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் இப்போது 3 வடிவங்களிலும் டாப் பிளேயர் ஆகி பாகிஸ்தான் கேப்டனாக உயர்ந்துள்ளார்.
எப்படி பும்ராவை நாம் அனைத்து வடிவ சிறந்த பவுலர் என்கிறோமோ அதே போல் அனைத்து வடிவங்களிலும் சிறந்து விளங்கும் ஒரு சில டாப் வீரர்களில், வார்னர் உட்பட பாபர் அசாமும் ஒருவர்.
அவரிடமிருந்து கோலிக்கு வந்த ஆறுதல் மெசேஜில், “இதுவும் கடந்து போகும் விராட் கோலி, திடமாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார், இது வைரலாகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Babar Azam, India Vs England, India vs Pakistan, Virat Kohli