முகப்பு /செய்தி /விளையாட்டு / பாபர் அசாம் வரலாறு படைப்பார் - தினேஷ் கார்த்திக் பாராட்டுக்கு பாபர் பதில்

பாபர் அசாம் வரலாறு படைப்பார் - தினேஷ் கார்த்திக் பாராட்டுக்கு பாபர் பதில்

பாபர் அசாம்

பாபர் அசாம்

உலக கிரிக்கெட்டில் அடுத்த பெரிய வீரர் பாபர் அசாம் தான், அவர் 3 வடிவங்களிலும் ஐசிசி ரேங்கிங்கில் 1-ம் இடத்தைப் பிடித்து வரலாறு படைப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறியதற்கு பாபர் அசாம் பதிலளித்துள்ளார். பாபர் அசாமின் கிரிக்கெட் பிம்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, அவர் பாகிஸ்தானின் அனைத்து வடிவ கேப்டனாகியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலக கிரிக்கெட்டில் அடுத்த பெரிய வீரர் பாபர் அசாம் தான், அவர் 3 வடிவங்களிலும் ஐசிசி ரேங்கிங்கில் 1-ம் இடத்தைப் பிடித்து வரலாறு படைப்பார் என்று தினேஷ் கார்த்திக் கூறியதற்கு பாபர் அசாம் பதிலளித்துள்ளார். பாபர் அசாமின் கிரிக்கெட் பிம்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, அவர் பாகிஸ்தானின் அனைத்து வடிவ கேப்டனாகியுள்ளார்.

பாகிஸ்தான் அணியை உலகக்கோப்பை டி20-யில் அரையிறுதிக்கு இட்டுச் சென்றார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இரண்ட் வடிவங்களிலும் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். ஐபிஎல் 2022-ல் பிரமாதமாக ஆடிய தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

அவர் சமீபத்தில் ஊடகவியலாளர்களுடன் உரையாடிய போது பாபர் அசாம் 3 வடிவங்களிலும் நம்பர் 1 வீரராக வரலாறு படைப்பார் என்று கூறியிருந்தார்.

தினேஷ் கார்த்திக் கூறியதை பாபர் அசாமிடம் சமீபத்திய மீடியா உரையாடலின் போது கேட்கப்பட்டது, அதற்குப் பாபர் அசாம், “நிச்சயமாக ஒரு வீரராக அனைத்து வடிவங்களிலும் நம்பர் 1 வீரராவது என்பது ஒரு கனவு. அதற்கு இடையறா கவனமும் கடின உழைப்பும் தேவை.

ஒன்றிரண்டு வடிவங்களில் நம்பர் 1 வீரராக இருப்பது போலல்லாமல் 3 வடிவங்களிலும் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது என்பது நிறைய உழைப்பையும், உடல் தகுதியையும் கோருவதாகும்.

அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகளாக இருந்து வருகின்றன. இடைவெளி இல்லை. இதற்கு கூடுதல் உடல் தகுதி தேவை.இதற்குத்தான் என்னைத் தயார்ப்படுத்தி வருகிறேன். வெள்ளப்பந்து கிரிக்கெட்டில் இதுவரை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது.

டெஸ்ட்டிலும் இதே அளவு சாதிக்க தயார்ப்படுத்த வேண்டும்.” இவ்வாறு கூறினார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.

First published:

Tags: Babar Azam, Dinesh Karthik, Pakistan cricket